2 மடங்காக உயர்ந்த திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை.. எத்தனை கோடி தெரியுமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையின் தொகை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி வந்தால் திருப்பம் உண்டாகும் என்பது ஐதீகம். நாம் நினைத்தால் கூட அங்கு செல்ல முடியாது. கடவுளே நினைத்தால் மட்டுமே நாம் அங்கு செல்ல முடியும் என்று கூறப்படிகிறது. திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாட்டினர் என பல்வேறு பகுதிகளில் மக்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

பணக்கார கடவுள் என்ற பெயர் பெற்றர் திருப்பதி ஏழுமலையான். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபடுவதோடு தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள், ரூபாய் நோட்டுகள் என லட்சக்கணக்கில் உண்டியல் காணிக்கையாக செலுத்துகின்றனர். அதேபோல, திருப்பதியில் மிகவும் புனிதமாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுவது லட்டு பிரசாதம். லட்டு விற்பனையிலும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது.
திருப்பதி திருமலைக்கு விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பிப்ரவரி 6-ஆம் தேதி மொத்தம் 58,908 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 19,549 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். அன்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ. 3.23 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2011-12 ஆம் நிதியாண்டில் 692 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. 2012-13 ஆம் நிதியாண்டில் 770 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2013-14 ஆம் நிதியாண்டில் 746 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 2014-15 ஆம் நிதியாண்டில் 862 கோடி ரூபாயும், 2015-16 ஆம் நிதியாண்டில் 915 கோடி ரூபாயும், 2016-17 ஆம் நிதியாண்டில் 990 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
அதேபோல, 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ. 991 கோடி, 2018-19ஆம் நிதியாண்டில் 1,052 கோடி, 2019-20 ஆம் நிதியாண்டில் 1,095 கோடி, 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ. 546 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளன. 2021-22ஆம் நிதியாண்டில் ரூ. 839 கோடி, 2022-23 ஆம் நிதியாண்டில் 1,450 கோடி, 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ. 1,391 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 1,365 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கான அறிவிப்பு மாதந்தோறும் வரும். அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில், ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். கூடுதலான லட்டு வேண்டுமானாலும் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ. 300 தரிசனம் மற்றும் அறை புக்கிங்கிற்கு விரைவான இன்டர்நெட் வசதி இருந்தால் விரைவில் புக் செய்து விடலாம்.












Click it and Unblock the Notifications