அண்ணி ன்னு பார்க்கல.. மகள்கள் கதறியும் விடல.. தாண்டவமாடி கொதித்தெழுந்த கொழுந்தன்! திணறிய திருப்பதி
திருமலை : சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் செய்த செயல், திருப்பதியை திணறடித்துவிட்டது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் திருப்பதி பத்மாவதி நகரை சேர்ந்தவர் தாஸ்.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் ஒரு பிசினஸ்மேன்.. மனைவி பெய்ர சுனிதா.. 35 வயதாகிறது.. 2 மகள்கள் இருக்கிறார்கள்.

2 மகள்கள்: மூத்த மகள் தேவிஸ்ரீ -க்கு 13 வயதாகிறது.. இளைய மகள் நீரஜாவுக்கு 11 வயதாகிறது.. இவர்கள் 2 பேருமே அங்குள்ள பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வந்தனர்.
தாஸின் தம்பி பெயர் மோகன்.. 36 வயதாகிறது.. இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர்... கடந்த 2019ம் ஆண்டு மோகனுக்கு திருமணம் நடந்துள்ளது.. ஆனால், தனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று மோகன் வீட்டில் சொல்லியிருக்கிறார்.. ஆனாலும், குடும்பத்தினர் ஆனால் அவரை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.. கடைசியில் அண்ணனும், அண்ணியும் வற்புறுத்தியதால், அவர்கள் பேச்சை மறுக்க முடியாமல் இந்த திருமணத்தை செய்து கொண்டாராம் மோகன்.
பெண் குழந்தை: திருமணத்துக்கு பிறகு தன்னுடைய மனைவியுடன் அதேபகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தார் மோகன்.. இப்போது அவருக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆனால், மோகன் தம்பதியிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.. எந்நேரமும் பிரச்சனையும், சண்டையுமாக இருந்து வந்த நிலையில், மோகனின் மனைவி, குழந்தையை தூக்கி கொண்டு தனியாக சென்றுவிட்டார்.
இதனால் தனித்து நின்ற மோகன், தனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று சொல்லியும்கூட, தன்னை ஏன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தீர்கள்? இப்போது மனைவி பிரிந்து விட்டாரே? குழந்தையையும் தூக்கி கொண்டு போய்விட்டாரே? என்று அண்ணனிடம், அண்ணியிடமும் மோகன் அடிக்கடி தகராறு வந்துள்ளார்.
சந்தோஷம்: அதுமட்டுமல்லாமல், "என்னுடைய வாழ்க்கையை சீரழித்ததே நீதான்.. இப்ப நீ மட்டும் உன் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறாயா?" என்று எந்நேரமும் கேட்டு சண்டை போடுவாராம்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, தாஸ் அருகிலிருந்த கடைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் அண்ணி சுனிதா மற்றும் 2 மகள்கள் மட்டும் இருந்திருக்கிறார்கள்.. அப்போது அங்கு வந்த மோகன், அண்ணியிடம் மறுபடியும் தகராறு செய்துள்ளார். கண்டபடி அண்ணியை திட்டிய மோகன், அப்போதும் ஆத்திரம் அடங்காமல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அலறல் சத்தம்: சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து ரூமில் படித்துக்கொண்டிருந்த 2 மகள்களும் ஓடிவந்தனர்.. ரத்த வெள்ளத்தில் அம்மா விழுந்து கிடப்பதை கண்டு, 2 பெண் குழந்தைகளும் அலறி கத்தினார்கள். இந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அவர்களை பார்த்ததுமே, வீட்டிற்குள் அவர்கள் வந்துவிடக்கூடாது என்று மோகன் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டார்..
அலறி துடித்து கொண்டிருந்த தேவிஸ்ரீ, நீரஜாவையும் அங்கேயே கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பிறகு, அங்கிருந்த ரூமுக்குள் சென்று மோகன் தூக்கு போட்டு தற்கொலையும் செய்துகொண்டார்.

பரிதாபம்: வீட்டுக்கு வெளியே கதவை தட்டியும் நீண்ட நேரம் திறக்கப்படாததால், இதுகுறித்து அப்பகுதி மக்கள், கடைக்கு சென்றிருந்த தாஸுக்கு போனில் தகவல் தெரிவித்தனர்... இதைக்கேட்டு கதறி அழுதுகொண்டே தாஸ் வீட்டுக்கு ஓடிவந்தார்.. திருப்பதி வெங்கேடஸ்வரா பல்கலைக்கழக போலீசாரும் தகவலறிந்து வந்துவிட்டனர்.. கதவை உடைத்து கொண்டு, சடலங்களை மீட்டனர்..
மனைவி, குழந்தைகளின் சடலத்தை கண்டு தாஸ், வெடித்து கதறினார்.. இதையடுத்து, அனைவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. இதுகுறித்து விசாரணையையும் நடத்தி வருகிறார்கள். அந்த தெருவிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள், மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications