திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்க சூப்பர் வசதி.. டிக்கெட் பெறுவதிலும் வருது நல்ல நடைமுறை
திருப்பதி: உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டு வாங்குவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஏழுமலையான் கோவிலில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து லட்டு பெறும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறது. யூனியன் வங்கி, கனரா வங்கி சார்பில் ஐந்து இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் விஐபி தரிசன டிக்கெட்டுகளையும் இதேமுறையில் பெறும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற இந்துக்களின் வழிபாட்டு தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் இருக்கிறது. திருமலையில் உள்ள பெருமாளை பாலாஜி என்றும், வெங்கடேஸ்வரா என்றும் மக்கள் வணங்குகிறார்கள்..ஏழுமலைகளின் அதிபதியான ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரமும் பக்தர்கள் காத்துக்கிடக்கிறார்கள். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியை பொறுத்தவரை பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு திருப்பதியில் மட்டுமே கிடைக்கும். திருப்பதி வரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) நிர்வாகம் பல்வேறு சர்ச்சைக்கு பின்னர் தற்போது மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
திருமலை திருப்பதியில் உள்ள லட்டு கவுண்டர்களில் பிரத்யேக ஸ்கேனிங் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து லட்டு பெறும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறது. யூனியன் வங்கி, கனரா வங்கி சார்பில் ஐந்து இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்கேனிங் இயந்திரம் மூலம் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகிறது. இந்த ஸ்கேனிங் இயந்திரங்கள் வேகமாக லட்டுகளை வழங்கவும், லட்டு விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
திருப்பதியில் தற்போது வரை ஆதார் எண் அடிப்படையில் லட்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த நடைமுறையே தொடரப்பட உள்ளது. தற்போது ஆதார் செயல்முறை ஸ்கேனிங் இயந்திரங்கள் செயல்படுகின்றன. பிரசாத கவுண்டரில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், இயந்திரம் மூலம் பின்னாடி லட்டுகளை பெறலாம். இதன் மூலம், பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை..
இந்த ஸ்கேனிங் எந்திரங்கள் காரணமாக லட்டு விற்பனையில் நடக்கும் முறைகேடு, இடைத்தரகர்கள், புரோக்கர்களின் தொல்லை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் விஐபி தரிசன டிக்கெட்டுகளையும் ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் பெறும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தற்போது செல்ல விரும்புகிறீர்களா.. கூட்டம் எப்படி என்று தெரிய வேண்டுமா?
ஜூன் 21ம் தேதி நிலவரப்படி இலவச தரிசனத்துக்கு மக்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்று ஒரு நாள் மட்டும் 90 ஆயிரத்து 87 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 41 ஆயிரத்து 891 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்கள். அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 30 லட்சம் கிடைத்திருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications