திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பௌர்ணமிக்கு போகப் போறீங்களா.. மேஜர் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடப்பது வழக்கம். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சூழலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நாட்களில் நடக்கும் பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன சேவைக்கு மிக உயர்ந்த இடம் உண்டு. ஏனெனில் திருமாலின் வாகனமும் பக்தரும்: கருடாழ்வார் பெருமாளின் பிரதான வாகனமாகவும், அதே சமயம் அவருடைய முதன்மை பக்தராகவும் (பரமபாகவதர்) கருதப்படுகிறார்.

கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வரும்போது, கருடன் மீது அமர்ந்து வரும் பெருமாளைத் தரிசிப்பது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் நடைபெறும் இந்த சேவை, பக்தர்களுக்கு ஒரு மன அமைதியையும், பெருமாளின் அருளையும் வழங்குவதாகக் கருதப்படுகிறது. இந்த சூழலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நாட்களில் நடக்கும் பவுர்ணமி கருடசேவை ரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடப்பது வழக்கம். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.
அதேபோல், இந்த ஆண்டு (2026) ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கருடசேவை நடக்க உள்ளது. இந்தப் பவுர்ணமி கருடசேவை கோவிலில் நடக்கும் ஒரு ஆன்மிக நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
அதன்படி மே 1-ந்தேதி, மே 31-ந்தேதி, ஜூன் 29-ந்தேதி, ஜூலை 29-ந்தேதி, ஆகஸ்டு 28-ந்தேதி, செப்டம்பர் 26-ந்தேதி, அக்டோபர் 26-ந்தேதியில் கருடசேவை நடக்கிறது.
அதேநேரத்தில் நவம்பர் 24-ந்தேதி கார்த்திகை தீப உற்சவம் நடப்பதாலும், டிசம்பர் 24-ந்தேதி அத்யாயன உற்சவம் நடப்பதாலும் பவுர்ணமி கருட வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் திருமலைக்குத் திட்டமிட்டு வர வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம் மற்றும் அத்யாயன உற்சவம் போன்றவை கோவில் நாட்காட்டியில் மிக முக்கியமான நிகழ்வுகள். எனவே இந்த உற்சவங்களுக்கு அதிக நேரம் மற்றும் கோவிலின் பிரதான வீதிகள் தேவைப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நாட்களில், வழக்கமான சேவைகளை நடத்துவது நெரிசலை அதிகரிக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பிரதான உற்சவங்கள் எவ்விதத் தடையுமின்றி நடக்கவும் மற்ற சேவைகள் அந்த நாட்களில் தவிர்க்கப்படுகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications