திருப்பதி ஏழுமலையான் கோயிலில் Pre Wedding Shoot! முகம் சுளித்த பக்தர்கள்! மன்னிப்பு கேட்ட மாப்பிள்ளை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு முன் விதிகளை மீறி போட்டோ ஷூட் நடத்திய புதுமணத் தம்பதி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டது வைரலாகி வருகிறது. மேலும் அந்த போட்டோஷூட்டில் அவர்கள் பக்தர்கள் முகம் சுளிக்க வைக்கும் விஷயத்தையும் செய்திருந்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் திருமால். அதே பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர்களுக்கு திருமலை திருப்பதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு ஏழுமலையான் கோயில் முன் இருக்கும் காலி இடங்களில் போட்டோ ஷூட் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

அப்போது காயத்ரியின் நெற்றியில் திருமால் முத்தமிடுவது போன்றும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இது பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும் போட்டோ ஷூட் எடுப்பது விதிகளையும் தடையையும் மீறிய செயலாகும்.
இந்த நிலையில் அந்த புதுமண தம்பதி, தங்களது தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர். ஏழுமலையான் கோயில் முழுவதும் 1600 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் நிபந்தனைகளை மீறி புதுமணத் தம்பதி போட்டோஷூட் எடுத்ததை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இவர்கள் போட்டோ ஷூட் எடுத்த இடங்கள் எல்லாம் மிகவும் முக்கியமான பகுதிகளாகும். அதாவது கொல்ல மண்டபம் முதல் அகிலாண்டம் பகுதி வரை இவர்கள் போட்டோ ஷூட் எடுத்தனர். இந்த பகுதிகளில் போட்டோ, வீடியோ எடுப்பதும் ரீல்ஸ் எடுப்பதும் கூடாது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பாதுகாப்பான பகுதிகளில் புதுமணத் தம்பதியும் கேமராமேனும் போட்டோ எடுத்த போது அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை. ஒரு கோயில் வளாகத்தில் இப்படியெல்லாம் போட்டோ ஷூட் நடத்தியும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது அவர்களது அலட்சிய போக்கை காட்டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் சன்னிதிக்கு நேர் எதிரே தம்பதியினர் போஸ் கொடுத்து, நெருக்கமான சைகைகளைப் பரிமாறிக்கொண்டதுடன், அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறியதாகச் சாட்சிகள் கூறினர். பக்தர்கள் அருகிலிருந்தபோதிலும், கேமராமேன்கள் காட்சிகளைத் தீவிரமாகப் பதிவு செய்வதைக் காண முடிந்தது. குறிப்பாக, உணர்ச்சிகரமான மற்றும் கூட்டமான அந்தப் பகுதியில் இருந்து பாதுகாப்புப் பணியாளர்களின் உடனடிப் பதில் இல்லாதது பக்தர்களை ஆச்சரியப்படுத்தியது.

கோயிலுக்கு அருகில் இதுபோன்ற புகைப்படப் படப்பிடிப்புகள் மீண்டும் மீண்டும் நடப்பது குறித்து பக்தர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். இத்தகைய செயல்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கையுடன் வரும் திருமலையின் புனிதத்தன்மையைக் கெடுப்பதாகவும் பலர் நம்புகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கண்காணிப்பு மற்றும் கூட்டம் கட்டுப்பாடு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பக்தர்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர்.
மத முக்கியத்துவம் வாய்ந்த திருமலைக்கு வரும் பார்வையாளர்கள் எந்நேரமும் கண்ணியத்தைப் பேணுவது அவசியம். உறுதியான நடவடிக்கைகள் தெளிவான செய்தியை அளிக்கும் என்றும், இந்து மதத்தின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றான திருமலையின் புனிதத்தன்மையைப் பாதுகாக்க உதவும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் மன்னிப்பு வீடியோவில் திருமால் கூறியிருப்பதாவது: திருப்பதியில் எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னர் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தினோம். மிகவும் பாதுகாப்புக்குரிய பகுதிகளில் போட்டோ ஷூட் எடுக்கக் கூடாது என எங்களுக்கு உண்மையில் தெரியாது. இனி அது போல் செய்ய மாட்டோம். தவறு என தெரிந்ததும், அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்துவிட்டோம். நாங்கள் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications