லட்டு பிரச்சினையே ஓயலை! திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கக் கொடி மரம் சேதம்! அப்போ பிரம்மோற்சவம்?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை தங்கக் கொடி மரத்தில் கருடன் கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ள நிலையில் அந்த தங்கக் கொடி மரம் சேதமடைந்த சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருட பிரம்மோற்சவம் இன்று மாலை 5.45 மணிக்கு தொடங்கப்படவிருக்கிறது. இதை முன்னிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருடைய மனைவியுடன் பட்டு வஸ்திரத்தை கொண்டு வர போகிறார்.

பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், அங்குள்ள தங்கக் கொடி மரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்படும். இதற்காக கயிற்றை கொடி மரத்தின் வளையத்தில் பொருத்தும் பணிகளில் அர்ச்சகர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தங்கக் கொடி மரத்தில் இருந்த வளையம் உடைந்து விட்டது. இதையடுத்து அந்த வளையத்தை சீரமைக்கும் பணியில் தேவஸ்தான அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலை பிரம்மோற்சவம் தொடங்குவதற்குள் அதை சரி செய்துவிடலாம் என்கிறார்கள்.
ஏற்கெனவே லட்டு சர்ச்சைக்கு ஒரு விடை தெரியாமல் உள்ள நிலையில் தற்போது பிரம்மோற்சவத்திற்காக தயாரான தங்கக் கொடி உடைந்து சேதமானது பக்தர்களுக்கு வேதனையை கொடுக்கிறது. திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.
அதிலும் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த போது இது போன்ற முறைகேடுகள் நடந்ததாகவே அவர் தெரிவித்துள்ளார். இதனால் திருப்பதி லட்டு விவகாரம் உலகில் உள்ள பெருமாள் பக்தர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பதி உண்டியல் பணத்திலும் திருட்டு நடந்ததாகவும் பக்தர்கள் காணிக்கையாக போட்ட சொத்து பத்திரங்களை காணவில்லை என்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த லட்டு தொடர்பாக இந்து அமைப்புகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வரும் நிலையில் தங்க கொடி மரம் சேதமடைந்த சம்பவம் பெருமாள் பக்தர்களை கவலையடைய செய்துள்ளது.
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், போக சீனிவாசமூர்த்தி என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கோயிலில் கொடி கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்ற தேவையான புனித தர்ப்பை, கயிறு ஆகியவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர்.
இவை ரங்கநாயக மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பிரம்மோற்சவ விழா தொடங்கப்படும் போது இந்த கொடியேற்றப்பட இருந்த நிலையில், தங்கக் கொடி மரம் சேதமடைந்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications