Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tirupati: சென்னையில் வரும் 22 ஆம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலம்.. ஏழுமலையான் பக்தர்கள் நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரம்மோற்சவத்தின் கருட சேவைக்கு முன்னதாக, தமிழ்நாடு சார்பாக ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் 11 வெண்பட்டு திருக்குடைகளை, 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று திருமலையில் சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டு 21-வது ஆண்டாக நடைபெறும் திருக்குடை ஊர்வலம், செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை சேனா கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் இந்த கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். அப்போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் தரப்பில் இந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

tirupati-thirukkudai-procession-to-be-held-in-chennai-on-september-22

22 ஆம் தேதி தொடங்குகிறது

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், வருகிற 22- ஆம் தேதி (திங்கள் கிழமை) காலை 10.31 மணிக்கு, பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது தொடர்பாக ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோத்சவ காலத்தில், தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று, 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று, ஏழுமலையான் கருடசேவைக்காக சமர்ப்பிக்கப்படும், பாரம்பரியமிக்க திருக்குடைகள். ஆதிசேஷனே, திருக்குடையாக திருஉருவம் பெற்று பெருமாளுக்கு சேவை சாதிக்கிறார் என்பது ஐதீகம்.

வறுமை நீங்கும், நோய் நொடி விலகும்

பெருமாளிடம் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகளை, திருப்பதி திருக்குடையிடம் பக்தர்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அது ஏழுமலையானை சென்றடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான், திருப்பதி திருக்குடை ஊர்வல காலத்தில் சென்னையில் இருக்கும் பக்தர்கள், விரதம் இருந்து திருக்குடைகளை தரிசிக்கிறார்கள். ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பதி பிரம்மோத்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது. 21-வது ஆண்டாக, இந்த ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், வருகிற 22-ம் தேதி, காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது.

திருக்குடை ஊர்வலம்

தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர். 22-ம் தேதி, தொடக்கவிழா நிகழ்ச்சியில், உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி, அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர். செல்லமுத்து (ஐஏஎஸ் ஓய்வு), பொதுச்செயலாளர் எஸ். சோமசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர். அன்றைய தினம் திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது.

ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம்

பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, வடமலை தெரு, தானா தெரு சந்திப்பு, செல்லப்பா தெரு, ஓட்டேரி பாலம் வழியாக கொன்னுார் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது. 23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஐசிஎப், ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது. 24-ம் தேதி (புதன்கிழமை) பாடி, அம்பத்துார் எஸ்டேட், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது.

திருக்குடைகள் சமர்ப்பணம் 25-ம் தேதி (வியாழக்கிழமை) ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. அங்கு பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்க்கப்படுகின்றன. பின்னர், 27-ம் தேதி (சனிக்கிழமை) திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

எவ்வித கட்டணமும் தரவேண்டாம்

திருப்பதிக் குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள், திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப்பெற குடும்பத்துடன் வாருங்கள். திருக்குடைகளை தரிசித்து, தங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பியுங்கள். திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. திருப்பதி திருக்குடைகள் தனிநபர் வீடுகளுக்கோ, கடைகளுக்கோ வந்து தனிப்பட்ட பூஜையை ஏற்றுக்கொள்ளாது. திருப்பதி திருக்குடை தொடர்பாக எவரிடமும் எவ்வித கட்டணமும் தரவேண்டாம். நன்கொடைகள் வாங்கப்பட மாட்டாது. உண்டியல் வசூல் கிடையாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+