திருப்பதியில் இனி "இவர்களுக்கே" முன்னுரிமை.. தேவஸ்தானம் குட் நியூஸ்.. திருமலையில் திகைத்த பக்தர்கள்
திருப்பதி: திருப்பதியில் உள்ள பிரபலமான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இனி சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.. 77வது குடியரசு தின விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் இந்த மகிழ்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்..
77-வது குடியரசு தின விழாவினையொட்டி, நேற்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஐஏஎஸ், தேசிய கொடியேற்றினார்..

பிறகு தன்னுடைய உரையில் அனில் குமார் சிங்கால் பேசும்போது, "உலக பிரசித்தி பெற்ற தார்மீக அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சாமானியர்களுக்கு முன்னுரிமை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
கடந்த வருடம் பிரம்மோற்சவத்தை வெற்றிகரமாக நடத்தினோம். அதில் 28 மாநிலங்களை சேர்ந்த 6,976 கலைஞர்கள் பங்கேற்று வெகுசிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். முதன்முதலாக இந்த முறை வைகுண்ட ஏகாதசிக்கு முதல் 3 நாட்கள் குலுக்கல் முறையில் ஆன்லைன் டிக்கெட்டுகளை வழங்கி, சிறப்பாக தரிசன ஏற்பாடுகளை செய்தோம்.
மீதமுள்ள 7 நாட்களும் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.. அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் ரசப்தமி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
பக்தர்கள் மகிழ்ச்சி
கடந்த 1985-இல் ஏழுமலையான் பக்தா்களுக்கு தினசரி அன்னபிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கியது. இது ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் பக்தா்களுக்கு சுவையான, தரமான அன்னபிரசாதம் வழங்கி வருகிறது.
திருமலையில் ஏடிஜி எச் முதல் ஆக்டோபஸ் வரையிலான வெளிப்புற வளைய சாலையில் ரூ. 25.60 கோடி செலவில் பக்தா்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் ஏஐ உதவியுடன் பக்தர்களின் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்... மேலும் ஸ்ரீவாரி தரிசனமும் பாதுகாப்பும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் வழங்கப்படுகிறது.. தேவஸ்தானத்தில் 3000 புதிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம்.
குட்நியூஸ் தந்த தேவஸ்தானம்
வோண்டிமிட்டா மாஸ்டா் திட்டத்தின் ஒரு பகுதியாக, 100 அறைகள் கட்ட தேவஸ்தான அறங்காவலா் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 37 கோடி நிதியும், 108 அடி உயர ஜாம்பவானின் சிலை கட்டுமானமும் ரூ. 16.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
இதேபோல், மற்ற கோயில்களின் மேம்பாட்டிற்காக தேவஸ்தானம் நிதி உதவி வழங்கி வருகிறது. இதில், காணிப்பாக்கத்தில் ரூ. 25 கோடி செலவிலும், கொண்டகட்டு ஸ்ரீ வீராஞ்சநேய சுவாமி கோயிலில் ரூ. 35.19 கோடி செலவிலும் பக்தா்களுக்கு வசதிகளை வழங்கி வருகிறோம்.
திருமலையில் மருத்துவ தாவரங்களை வளா்ப்பதற்கும், ஒண்டிமிட்டாவில் உள்ள புனித வனங்களுக்கும் ஒரு தெய்வீக மருத்துவ வனத்தை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறோம். அலிபிரி அருகே ரூ.460 கோடி செலவில் ஒருங்கிணைப்பு டவுன் ஷிப் கட்டப்படும்
பக்தர்களின் வசதிகள்
ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, எஸ்சி, எஸ்டி, பிசி காலனிகளில் 5,000 ஸ்ரீநிவாசர் திருக்கோயில்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.... கோயமுத்தூர், மும்பை, கர்நாடகா, அசாம், உள்ளிட்ட இடங்களில் வரும் ஜுன் மாதத்திற்குள் ஏழுமலையான் கோயில் கட்ட பூமி பூஜை நடத்தப்படும்.
கோவையில் ஏழுமலையான் கோயில் கட்டுமானத்திற்காக பக்தர் ஒருவர், ரூ. 300 கோடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்...
ஏழுமலையான் மகிமையை நாடு முழுவதும் பரப்பவும், தொலைதூர இடங்களிலிருந்து திருமலைக்கு வர முடியாத பக்தா்களின் வசதிக்காகவும் நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்படும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications