திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி புதிய கட்டுப்பாடு! ஆர்ஜித சேவைக்கு புக் செய்தவர்களுக்கும் கெடுபிடி
திருப்பதி: ஏழுமலையான் தரிசனம், தங்கும் அறைகள் மற்றும் ஆர்ஜித சேவைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
இதுவரை சாதாரண ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்பட்டபோது, போலி அட்டைகளை வைத்து சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தடுக்க, இனி 'ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரச் சரிபார்ப்பு' (Aadhaar-based Face Recognition) முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தச் சரிபார்ப்பு முறைக்காக ஆந்திர அரசுடன் இணைந்து தேவஸ்தானம் செயல்படுகிறது. இதற்காக பதிவுக் கட்டணமாக இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம். ஒவ்வொரு ஆதார் சரிபார்ப்புக்கு 4 பைசா.
e-KYC சரிபார்ப்புக்கு ₹3.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத விசேஷங்கள் மற்றும் உற்சவங்கள் ஏப்ரல் மாதம் திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள துணை ஆலயங்களில் நடைபெறவுள்ள முக்கிய விழாக்களை பார்க்கலாம்.
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆலயத்தில், ஏப்ரல் 10, 17, 24 வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம். ஏப்ரல் 11 மாலை 6:45 மணிக்கு கஜ வாகனத்தில் தாயார் வீதியுலா. ஏப்ரல் 30 முதல் மே 2 வரை வசந்தோற்சவம் நடைபெறும்; ஏப்ரல் 28 கோயிலாழ்வார் திருமஞ்சனம், ஏப்ரல் 29 அங்குரார்ப்பணம்.
ஸ்ரீ சுந்தர்ராஜ சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 16 மாலை 7 மணிக்கு திருச்சி உற்சவம்; ஸ்ரீ பலராமகிருஷ்ண சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 21 மாலை 7 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண சுவாமிக்கு திருச்சி உற்சவம்; ஸ்ரீ சூரியநாராயண சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 29 மாலை 5 மணிக்கு திருச்சி உற்சவம் நடைபெறும். ஸ்ரீ சீனிவாச சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் மாத சனிக்கிழமைகளில் காலை 8 மணிக்கு அபிஷேகம் உண்டு.
அப்பலாயகுண்டா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில்: ஏப்ரல் 7 செவ்வாய் காலை 8 மணிக்கு அஷ்டதள பாதபத்மாராதன சேவை; ஏப்ரல் 8, காலை 8 மணிக்கு அஷ்டோத்தர சத கலசாபிஷேகம்; ஏப்ரல் 12 காலை 10:30 மணிக்கு கல்யாண உற்சவம். ஏப்ரல் மாத வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு வஸ்திர அலங்கார சேவை, அபிஷேகம். ஏப்ரல் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி மூலவருக்கு அபிஷேகம்.
திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கவனித்து, தங்கள் தரிசனத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications