திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க கோபுரம் வரை செருப்பு அணிந்து வந்த பக்தர்கள்! 7 ஊழியர்கள் சஸ்பெண்ட்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்கள் செருப்பு அணிந்து வந்திருந்ததை அடுத்து இதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததாக பாதுகாப்பு படையை சேர்ந்த 7 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். கூட்டம் இருக்காது என நினைத்தால் அன்றுதான் அதிக கூட்டம் இருக்கும். கூட்டம் இருக்கும் என நினைத்தால் அன்றைய தினம் எளிதில் சுவாமி தரிசனம் செய்துவிடலாம்.
இப்படி திருப்பதி குறித்து கணிக்கவே முடியாது. இந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது.
நீண்ட வார விடுமுறை
மேலும் சனி, ஞாயிறு, திங்கள் என நீண்ட வார விடுமுறை என்பதாலும் பலர் திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் முழுவதும் கூட்டம் நிரம்பியிருந்தது. காத்திருப்பு அறைகளையும் தாண்டி எம்பிசி வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
உணவு, குடிநீர்
அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்கியது. இந்த ஏழுமலையான் கோயில நுழைவு வாயில் வரை சில பக்தர்கள் செருப்பு அணிந்து கொண்டு வந்திருந்தனர். அவர்கள் வெள்ளை நிறத்தினாலான செருப்பை அணிந்திருந்தனர்.
ஒரு முறை பயன்படுத்தும் செருப்பு
அவர்கள் அணிந்திருந்தது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் காலணி என்றாலும் அதை அணியக் கூடாது. அப்படி இருக்கும் போது அவர்கள் கோயிலுக்குள் நுழைய சில நிமிடங்களே இருந்த நிலையில் அங்கிருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் பார்த்துவிட்டனர்.
வெயில்
அவர்களிடம் விசாரித்ததில் வெயில் அதிகமாக இருப்பதால் அணிந்து வந்ததாக தெரிவித்தனர். பின்னர் செருப்பை கழற்றிவிட்டு போக சொன்னார்கள். இதை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதாக பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேரை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
திருப்பதி மலை
மேலும் திருப்பதி மலையில் குறிப்பிட்ட இடங்களில் உதாரணமாக மாட வீதிகள், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்கள் உள்ளிட்ட இடங்களில் செருப்பு அணிந்து செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் செருப்பு அணியக் கூடாது என்பதை அங்கேயே குறியிட்டு காட்டியிருப்பார்கள்.
தேவஸ்தானம்
எனவே பக்தர்கள் ஏழுமலையான் கோயில் பாரம்பரியத்தை காப்பாற்ற ஒத்துழைக்கும்படி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசிக்க
கடந்த ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் பிரியாணி, கோழி முட்டை போன்ற அசைவ உணவுகளை கொண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் அவற்றை திருமலை ராம்பகீசா விடுதிக்குச் செல்லும் இடத்தில் உள்ள பேருந்து நிறுத்த வளாகத்தில் உட்கார்ந்து சாப்பிட்டனர்.
அரசு பேருந்து
இதை அங்கு பேருந்துக்காக காத்திருந்த பக்தர்கள் பார்த்து திருமலை போலீஸுக்கு புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த போலீஸார் விசாரணை நடத்தி அந்த உணவை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்
விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். ஆனால் அலிபிரி சோதனை சாவடியை கடந்து இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் தற்போது பக்தர்கள் இருவர் செருப்பு அணிந்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications