திருப்பதியில் வரலாறு காணாத கூட்டம்.. கோயில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
திருப்பதி: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல. குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் முன்பே டிக்கெட் புக்கிங் செய்து தான் தயாராக இருக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் காலண்டர் படி, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டை நீங்கள முன்பதிவு செய்ய வேண்டும். இவை திருப்பதி தேவஸ்தானத்தின் டிடிடி இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும்.

அதேநேரம் 300 ரூபாய் டிக்கெட் இல்லை , உடனே ஏழுமலையான பார்க்க வேண்டும் என்றால், சுப்ரபாதம், சஹஸ்ரதிபாலங்கரணம், அங்கபிரதக்ஷிணை என வேறு சிறப்பு டிக்கெட்டுகள் இருக்க வேண்டும். அதை எல்லாம் வாங்குவது மிகவும் கடினம் ஆகும்.. 300 ரூபாய் அதேநேரம் எந்த டிக்கெட்டும் இல்லாமல் திருமலையில் பொதுதரிசனம் முறையில் ஏழுமலையான தரிசனம் செய்ய முடியும். இதற்கு டைம் ஸ்லாட் தரிசனம் போன்று தினமும் டிக்கெட் வழங்கப்படுகிறது. அப்படி வாங்கினால் வழக்கமான நாட்களில் 6-8 மணிநேரத்தில் சாமியை பார்க்க முடியும்.
ஒருவேளை அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நேரடியாக இலவச தரிசனத்திற்கு போக முடியும். ஆனால் அப்படி செல்பவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல மணி நேரமாகும். கூட்டம் குறைவாக இருந்தால் 12 மணி நேரம் வரையிலும், கூட்டம் மிக அதிகம் என்றால் 24 மணிநேரத்தை கடந்தும் நேரம் ஆக வாய்ப்பு உள்ளது.
திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.. பல கிமீ நீளத்திற்கு வரிசை.. மிரண்ட கோவில் ஊழியர்கள்
தற்போது கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருகிறது. பல மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசை கட்டி நிற்பதால் கோவில் ஊழியர்கள் திணறிபோய் இருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திரா மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்பட பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். வழக்கமாக விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற சமயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் கோடை விடுமுறை காரணமாக கடுமையாக கூட்டம் காணப்படுகிறது.
தற்போது திருப்பதி தேவஸ்தானம் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதியில் இன்று காலை வரை இலவச தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவித்து.
மேலும் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்துக்காக காத்திருப்பதுடன். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நிற்கும் நிலை நீடிக்கிறது. இதையடுத்து ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications