திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.. பல கிமீ நீளத்திற்கு வரிசை.. மிரண்ட கோவில் ஊழியர்கள்
திருப்பதி: கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருகிறது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசை கட்டி நிற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே திருப்பதி செல்லும் பிளான் இருந்தால் அங்குகூட்டம் எப்படி இருக்கிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இருக்கிறதா என்பதை அறிந்து செல்லுங்கள்.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரம் பக்தர்கள் திருமலைக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு நொடியாவது பாலாஜியை பார்த்துவிட மாட்டோமா என்று பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இலவச தரிசனத்தில் திருப்பதில் ஏழுமலையான பார்க்க கூட்டத்தை பொறுத்து 24 மணி நேரத்தையும் கூட தாண்டும்.

திருப்பதியில் டிக்கெட் எடுத்து பார்க்கலாமா என்றால், அதுவும் அவ்வளவு எளிதல்ல.. ஐஆர்சிடிசி வெப்சைட்டும், திருப்பதி வேதஸ்தான வெப்சைட்டும் ஒன்று.. இரண்டிலுமே அவ்வளவு எளிதாக டிக்கெட் புக்கிங் செய்துவிட முடியாது. 3 மாதங்களாக காத்திருக்க வேண்டும். ரயிலில் கூட சில சமயங்களில் டிக்கெட் கிடைத்துவிட வாய்ப்பு உள்ளது.
ஆனால் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல. குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் முன்பே டிக்கெட் புக்கிங் செய்து தான் தயாராக இருக்க வேண்டும். திருப்பதி தேவஸ்தானம் காலண்டர் படி, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டை நீங்கள முன்பதிவு செய்ய வேண்டும். இவை திருப்பதி தேவஸ்தானத்தின் டிடிடி இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும்.
அதேநேரம் உங்களிடம் 300 ரூபாய் டிக்கெட் இல்லை , உடனே ஏழுமலையான பார்க்க வேண்டும் என்றால், சுப்ரபாதம், சஹஸ்ரதிபாலங்கரணம், அங்கபிரதக்ஷிணை என வேறு சிறப்பு டிக்கெட்டுகள் இருக்க வேண்டும். ஆனால் அதை எல்லாம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.. 300 ரூபாய் டிக்கெட்டை வாங்குவதைவிடவும் கடினம். அதேநேரம் எந்த டிக்கெட்டும் இல்லாமல் திருமலையில் பொதுதரிசனம் முறையில் ஏழுமலையான தரிசனம் செய்ய முடியும். இதற்கு டைம் ஸ்லாட் தரிசனம் போன்று தினமும் டிக்கெட் வழங்கப்படுகிறது.
ஆனால் டைம் ஸ்லாட் தரிசனம் பெற்றவர்கள் 6-8 மணிநேரத்தில் சாமியை பார்க்க முடியும். ஒருவேளை அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நேரடியாக இலவச தரிசனத்திற்கு போக முடியும். ஆனால் அப்படி செல்பவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல மணி நேரமாகும். கூட்டம் குறைவாக இருந்தால் 12 மணி நேரம் வரையிலும், கூட்டம் மிக அதிகம் என்றால் 24 மணிநேரத்தை கடந்தும் நேரம் ஆக வாய்ப்பு உள்ளது.
இப்போது கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருக்கிறது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசை கட்டி நிற்பதால் கோவில் ஊழியர்கள் திணறிபோய் இருக்கிறார்கள். திருப்பதியில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருப்பதால் பாலாஜியை பார்க்க பல மணி நேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இப்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்புவோர் டிக்கெட் எடுத்து வருவது நல்லது என்கிறார்கள் காத்திருக்கும் பக்தர்கள்.












Click it and Unblock the Notifications