திருப்பதியில் முதன் முதலில் மொட்டை போட்ட நபர் யார் தெரியுமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதன் முதலாக மொட்டை போட்டது யார் தெரியுமா? திருமலையில் எப்போது மொட்டை போடும் வழக்கம் தொடங்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி போனால் திருப்பம் என்பார்கள். ஏழுமலையானை நினைத்து நம் வீட்டிலிருந்து வேண்டிக் கொண்டாலே கேட்டதை கொடுப்பார். அப்படியிருக்க திருமலைக்கே சென்றால்! வள்ளல் ஆகிவிடுவாரே!

திருப்பதி என்றாலே எல்லோருடைய நினைவுக்கும் வருவது லட்டும், மொட்டையும்தான்! லட்டு பிரசாதமானது திருப்பதியில் காலம் காலமாக செய்யப்பட்டு வருகிறது. மொட்டை தலையை பார்த்தாலே திருப்பதியா லட்டு எங்கே என்பார்கள்.
சில நேரங்களில் வெயிலுக்காக முடித்திருத்தும் கடையில் மொட்டை அடித்திருந்தால் கூட திருப்பதியா என்றும் லட்டு எங்கே என்றும் கேட்டு நாம் சொல்லும் பதிலை கேட்டு ஏமாந்துவிடுவார்கள். திருப்பதிக்கு போனாலே மொட்டை போடாமல் பெரும்பாலானோர் வரமாட்டார்கள்.
அப்படி திருப்பதியில் மொட்டை போட என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை பெருமாள் பூலோகத்திற்கு பயணம் செய்த போது தனது கூந்தலை இழந்துவிட்டாராம். இதற்காக நீலிதேவி என்ற இளவரசிதான் தனது முடியை காணிக்கையாக கொடுத்து ஏழுமலையானை வழிபாடு செய்துள்ளார்.
இதனால் மகிழ்ந்த ஏழுமலையான் முடியை காணிக்கையாக கொடுத்து வழிபாடு நடத்துபவர்களுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவேன் என வரம் அளித்துள்ளார். இதனால்தான் முடி காணிக்கையை பக்தர்கள் தொன்று தொட்டு கொடுத்து பெருமாளை வணங்கி வருகிறார்கள்.
அது போல் முடி காணிக்கை கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு கொடுக்காமல் இருக்கவே கூடாது. உண்டியல் காணிக்கையை கூட விட்டுவிடுவார். ஆனால் பெருமாள் முடி காணிக்கையை மட்டும் விடவே மாட்டார். அந்த வேண்டுதலை நினைவுப்படுத்தி முடி காணிக்கையை பெற்று விடுவார். நாம் கொடுக்கும் முடி காணிக்கைகள் தரம் பிரித்த சேகரித்து வைக்கப்பட்டு, அவை கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பணம் கோயில் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அது போல் திருப்பதி பெருமாளுக்கு நிறைய சிறப்புகள் உள்ளன. அதில் அவரது சிலையில் இருக்கும் முடி எப்படி வந்தது என்றே தெரியவில்லையாம். அந்த முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்குமாம். மேலும் அவரது சிலையில் காது வைத்து கேட்டால் கடல் அலைகளின் ஓசைகள் கேட்டுக் கொண்டே இருக்குமாம். அது எப்படி என தெரியவில்லை.
அது போல் திருமலையே குளிர்ச்சியான பகுதி என்றால் ஏழுமலையானின் சிலை மட்டும் எப்போதும் ஈரப்பதத்தோடுதான் இருக்குமாம். இதை அர்ச்சகர்கள் பட்டுத் துணி வைத்து ஒத்தி வைத்துக் கொண்டே இருப்பார்களாம். அது போல் திருப்பதி பெருமாளுக்கு முன்பு ஒரு அணையாவிளக்கு எரிந்து கொண்டே இருக்குமாம். அது யார் எப்போது ஏற்றியது என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications