கம்ப்யூட்டர் வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நவ்யா.. தாராபுரம் பள்ளியில் பரபரப்பு தற்கொலை
10ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்: "நல்லா படிப்பாள், லவ் எதுவும் இல்லை, சாப்பிட்டு வரேன்னு ஹாஸ்டல் வந்திருக்கா, ஆனா இப்படி தற்கொலை செய்துப்பான்னு நினைக்கல, என்னமோ சந்தேகமா இருக்கு" என்று உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவியின் தந்தை புலம்பி அழுகிறார்.
திருப்பூர் முருங்கம்பாளையத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவருடைய மகள்தான் நவ்யா. 15 வயதாகிறது. தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ மகளிர் ஹாஸ்டலில் தங்கி, அதே வளாகத்தில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் ஸ்கூல் நடந்தது. மதியம் சாப்பிட எல்லா மாணவிகளும் ஹாஸ்டலுக்கு வந்திருக்கிறார்கள். சாப்பிட்டு விட்டு திரும்பவும் ஸ்கூலுக்கு கிளம்பி போய்விட்டனர்.

அலறிய வார்டன்
அப்போது நவ்யாவும் சாப்பிட வந்தவர், கம்ப்யூட்டர் ரூமில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் கழித்து ஹாஸ்டலுக்குள் நுழைந்த வார்டன் நவ்யா தூக்கில் தொங்கியபடி துடித்து கொண்டிருப்பதை பார்த்து அலறினார்.

பரிதாப மரணம்
பின்னர் அங்கிருந்த அனைவரும் ஓடிவந்து நவ்யாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். ஆனாலும் நவ்யாவை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக பெற்றோருக்கும் தாராபுரம் போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. நவ்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை. கடந்த 4 வருடங்களாக இதே ஹாஸ்டலில்தான் தங்கி படித்து வந்திருக்கிறார்.

ஏன் தற்கொலை?
நவ்யாவின் தந்தை இதுகுறித்து பேசும்போது, "என் பொண்ணு நல்லா படிப்பாள். அதனால பொதுத்தேர்வு பார்த்து பயந்திருக்க மாட்டாள். குடும்பத்திலும் அவளுக்கு பிரச்சனை இல்லை, யாரையும் லவ் பண்ணவும் இல்லை, இப்படி இருக்கும்போது எப்படி தற்கொலை செய்து கொள்வாள்?

மாணவிகள் அச்சம்
எங்களுக்கு மகள் மரணத்தில் சந்தேகமாக இருக்கு. முறையான போலீஸ் விசாரணை தேவை. நியாயம் எங்களுக்கு கிடைச்சே ஆகணும்" என்று அழுதுகொண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பள்ளி மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications