ஒரே நாளில் தமிழகத்தில் அடுத்தடுத்து 3 கார் விபத்துகள்.. 13 பேர் பலி.. எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை
சென்னை: வெறும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் விபத்துக்குள்ளாகி 13 பேர் பலியாகி உள்ளனர். நடந்த எல்லா விபத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.. நீண்ட தூரம் கார் ஓட்டி செல்பவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
திருப்பூர், மதுரை, தூத்துக்குடி என 3 மாவட்டங்களில் விபத்து நடந்திருக்கிறது. வரிசையாக ஒவ்வொரு விபத்தாக பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் நல்லிக்கவுண்டன்நகர் புதுநகர் 7-வது வீதியை சேர்ந்த 60 வயதாகும் சந்திரசேகரன், திருப்பூரில் டையிங் கம்பெனி நடத்தி வந்தார். இவருடைய மனைவி சித்ரா (57). இவர்களது மூத்த மகன் சசிதரன் (30). இவருக்கு திருமணமாகி விட்டது. மருமகள் ஹரிவி வித்ரா (30), பேத்தி சாக்சி (3 மாதம்). சந்திரசேகரன்-சித்ரா தம்பதியின் இளைய மகன் இளவரசன் (26) ஆகியோர் ஒரு காரில் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சந்திரசேகரன்-சித்ரா தம்பதியின் 60-ம் கல்யாணத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து சென்றனர். அதன்படியே சந்திரசேகரன்-சித்ரா தம்பதியின் 60-ம் கல்யாணத்தை குடும்பத்தினர் கொண்டாடினர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திருக்கடையூரில் இருந்து திருப்பூருக்கு திரும்பி வந்தார்கள்
காரை இளவரசன் ஓட்டினார். இவர்களுடைய கார் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சந்திரசேகரன், இவருடைய மனைவி சித்ரா, மருமகள் ஹரிவி வித்ரா, பேத்தி சாக்சி மற்றும் இளைய மகன் இளவரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். சசிதரன் மட்டும் காருக்குள் உயிருக்கு போராடினார. அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பள்ளத்தில் இறங்கிய கார் மண் திட்டில் மோதி அந்தரத்தில் பறந்து கவிழ்ந்ததில் குமரி முன்னாள் எம்.பி.மகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த 61 வயதாகும் டாக்டர் ரவீந்திரன் வள்ளியூரில் சுகம் என்ற பெயரில் பிரபல மருத்துவமனை நடத்தி வந்தாா். இவரது மனைவி ரமணி (58). இவரும் டாக்டராக இருந்தார்.
ரவீந்திரனின் தாயார் சேர்மத்தாய் (81). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வந்தார். இவருக்கு கண் ஆபரேஷன் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக டாக்டர் தம்பதி ஒரு காரில் நேற்று காலையில் சிவகாசிக்கு போய், சேர்மத்தாயை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனையை முடித்துவிட்டு மீண்டும் சிவகாசிக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் தங்களது உறவினர்களிடம் கூறிவிட்டு நேற்று மாலையில் 3 பேரும் காரில் வள்ளியூருக்கு திரும்பி வந்துள்ளனர். காரை ரவீந்திரன் ஓட்டினார். முன் இருக்கையில் ரமணியும், பின் இருக்கையில் சேர்மத்தாயும் அமர்ந்திருந்தார்கள்...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைகுளம் நாற்கர சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கார் வந்து கொண்டிருந்தது.. அப்போது, டாக்டரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. பின்னர் கார் வந்த வேகத்தில் அந்த இடத்தில் இருந்த மண் திட்டில் மோதி சுமார் 100 அடி தூரத்திற்கு அந்தரத்தில் பறந்தது.
இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டாக்டர் ரவீந்திரன், ரமணி, சேர்மத்தாய் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் இறந்த டாக்டர் ரவீந்திரனுக்கு சொந்த ஊர் சிவகாசி ஆகும். அதுபோல் அவரது மனைவி ரமணிக்கு பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும். தற்போது அவர்கள் வள்ளியூரில் வசித்து வந்தனர். டாக்டர் ரமணி நாகர்கோவிலை சேர்ந்த முன்னாள் எம்.பி. எம்.சி.பாலனின் மகள் ஆவார்.
மதுரை வில்லாபுரத்தைச் கனகவேல், விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் இன்று அதிகாலை மதுரை நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டியின், இருசக்கர வாகனத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் இருந்த தடுப்பு கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாண்டி (48), சிவ ஆத்மிகா (8), கனகவேல் (61), கிருஷ்ணகுமாரி (58), நாகஜோதி (45), சிவஸ்ரீ உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த மூன்று விபத்தை உற்று கவனித்தால், 3 கார் ஓட்டுநர்களும் சொந்த கார் ஓட்டுநர்கள்.. தங்கள் காருக்கு தாங்களே டிரைவராக காரை ஓட்டி வந்துள்ளனர். சொந்த கார் ஓட்டுநர்கள் ஓட்டிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது 3 காரிலுமே யாரும் சீட் பெல்ட் அணிந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.. அதேநேரம் அடிக்கடி சொந்த காரில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் எங்கு சென்றாலும் பகலில் சென்று வருவது நல்லது.
இரவு நேரங்களில் சொந்த வாகனங்களில் செல்வோர் தொலைதூரம் பயணம் அடிக்கடி செல்வது சில நேரங்களில் சிக்கலாகும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் அதிவேக நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் ஓட்டிச்சென்று அனுபவம் இல்லாதவர்கள் திடீரென நீண்ட தூரம் காரை இயக்க வேண்டாம். நல்ல அனுபவம் உள்ள வாடகை கார் ஓட்டுநர்களை வைத்து செல்லலாம் என்கிறார்கள் கார் ஓட்டுநர்கள்.. அதேபோல் மலைப்பகுதியை பொறுத்தவரை நல்ல அனுபவம் உள்ள கார் ஓட்டுநர்களை வைத்து செல்வது நல்லது என்கிறார்கள்..
அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் சிலர் மனசாட்சியே இல்லாமல் வாகனங்களை பார்க்காமல் கிராஸ் செல்வார்கள்.. அவர்களை போன்றவர்களால் தான் பெரும்பாலும் பெரிய விபத்துகள் ஏற்படுகின்றன.
மதுரை திருமங்கலம் அருகே நடந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சியில் டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலையின் இடதுபுற தடுப்பில் மோதி இரு சக்கர வாகனத்தில் மோதி பிறகு சாலையின் மறுபக்கம் பறந்து போய் விழுந்து அங்கே இருந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது பதிவாகியுள்ளது. தூக்க கலக்கம்தான் இதற்கு காரணமாக இருந்துள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, இரவில் போயே ஆக வேண்டும் என்றால், நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.. தூக்கம் வந்தால் ஓய்வெடுத்துவிட்டு வாகனத்தை இயக்குவது மிகவும் நல்லது. பெட்ரோல் பங்க், டோல்கேட் அருகாமையில் வாகனத்தை நிறுத்தி நன்கு தூங்கலாம். அதைச் செய்யாமல் தூக்கத்தை சமாளித்துவிடலாம் என நினைத்து வாகனத்தை இயக்காதீர்கள். தூக்கம் உங்களிடம் சொல்லிவிட்டு வருவது கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications