"மசாஜ்" செய்ய வந்த புஷ்பலதா.. சொக்கிய தொழிலதிபர்.. டக்குனு பார்த்தால் 3 பேர்.. போலீசுக்கு ஒரே ஓட்டம்
திருப்பூர்: ஒரு மோசடி கும்பலிடம் வசமாக சிக்கி கொண்ட தொழிலதிபர், திருப்பூர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை தந்துள்ளார். !
போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தாலும், அப்பாவிகளும், சபலபுத்தி உள்ளவர்களும் தொடர்ந்து பணமோசடி கும்பலிடம் ஏமாந்தபடியே உள்ளனர்.
தொழில்நுட்பம் பெருக பெருக, மோசடி வித்தைகளும் அதற்கேற்றவாறே பெருகி வருகின்றன.. பியூட்டி பார்லர்கள் என்ற பெயரில் மசாஜ் சென்டர்களையும் சேர்த்து நடத்தி, பாலியல் வக்கிரங்களை ஏற்படுத்தி வரும் கும்பல்கள் சமீபகாலமாகவே அதிகம் கைதாகி வருகிறார்கள்.
நடிகை பூர்ணாவை கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா?.. நடிகை பெயரில் நூதன திருமண மோசடி கும்பல் சிக்கியது

அரைகுறை டிரஸ்
10 நாட்களுக்கு முன்புகூட சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. திருவொற்றியூரை சேர்ந்த 2 பெண்கள், வடபழனி போலீசில் ஒரு புகார் தந்திருந்தனர்.. அதில், தன்னுடைய மசாஜ் சென்டரில் பணிபுரியும் இளம்பெண் ஒருவரை 2 ஆண்கள் மிரட்டி நகையையும் பணத்தையும் பறித்துக் கொண்டதாக கூறியிருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், பல மோசடிகள் அம்பலமானது.. அரைகுறை ஆடைகளுடன் மசாஜ் தொழில் செய்தால், அதிகபட்ச பணம் வழங்குவதாக ஆசைகாட்டி அழைத்து, நகை, பணத்தை பறித்து கொண்டு தப்பித்து செல்வது கண்டறியப்பட்டது.

கவர்ச்சி ADVT
மீண்டும் ஒரு கவர்ச்சி விளம்பரத்தை பார்த்து திருப்பூரை சேர்ந்த ஒரு நபர் ஏமாந்து போயுள்ளார்.. அவினாசி மேற்குபதி அவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ்... 63 வயதாகிறது.. பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையத்தில் ஒரு பர்னிச்சர் கடையை சொந்தமாகவே நடத்தி வருகிறார்... இவர் கடந்த 2-ந்தேதி பெருமாநல்லூர் போலீஸில் ஒரு புகார் தந்தார்.. அந்த புகாரில், "கடந்த மாதம் 24-ந்தேதி எனக்கு ஒரு போன் வந்தது..

அத்துமீறல்
அதில் பேசிய ஒரு பெண், மசாஜ் செய்ய விருப்பம் இருந்தால் அழையுங்கள் என்றார்... உடனே நான் சரி என்றேன்.. அன்றிரவு அந்த பெண், என்னுடைய பர்னிச்சர் கடைக்கு அருகே உள்ள ரூமில் வந்து மசாஜ் செய்தார்.. அதற்கு என்னிடம் ரூ.1,200 வாங்கி சென்றார். பிறகு, மறுபடியும் 26-ந் தேதி அதே பெண், எனக்கு போன் செய்தார்.. மசாஜ் செய்ய வரட்டுமா? என்று கேட்டார்.. நானும் சரி என்றேன்.. அதேபோல, அன்றைய தினம் இரவு, ரூமுக்கு வந்து மசாஜ் செய்தார்.. அப்போது திடீரென ரூமுக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்துவிட்டனர்.. கத்தியை காட்டி மிரட்டி என்னுடைய டிரஸ்ஸை களைய சொன்னார்கள்...

பாஸ்வேர்டு
பிறகு, அந்த பெண்ணையும், என்னையும் சேர்த்து வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டனர்.. அதற்கு பிறகு, என்னிடம் இருந்து 1 பவுன் தங்க மோதிரம், ஏடிஎம் கார்டு, பாஸ்வேர்டு, போன்றவற்றை பறித்து கொண்டனர்.. இறுதியில், ரூ.2 லட்சம் கொடு, இல்லாவிட்டால் நிர்வாண போட்டோ, வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுவோம் என்று மிரட்டிவிட்டு, அந்த பெண் உள்பட 3 பேரும் சென்று விட்டனர்... அந்த பெண்ணும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளது அப்போதுதான் எனக்கு தெரியவந்தது..

புஷ்பலதா
என்னுடைய ஏடிஎம். கார்டில் இருந்து அடிக்கடி பணம் எடுத்துள்ளார்கள்.. இன்னமும் என்னை மிரட்டிகொண்டே இருக்கிறார்கள்.. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த புகாரின்பேரில், பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கோகுல்ராஜ் 21, யுவராஜ் 21, ஆகியோர கைது செய்தனர்.. அந்த பெண்ணின் பெயர் புஷ்பலதா.. 30 வயதாகிறது. அவரையும் சேர்த்து கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்..!!

அட்வான்ஸ் பணம்
இந்த கேஸைவிட மோசமான சம்பவம் ஒன்று கோவை உடையாம்பாளையத்தில் கடந்த வாரம் நடந்தது.. அந்த கல்லூரி மாணவருக்கு 22 வயதாகிறது,.. "இளம்பெண் ஒருவர் மசாஜ் செய்து, உங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவேண்டுமா? 2500 முன்பணம் கட்டுங்கள்" என்று ஒரு விளம்பரம் வந்துள்ளது.. இந்த இளைஞரும் அந்த பணத்தை கட்டி உள்ளார்.. பிறகு, பீளமேட்டில் அந்த ஸ்டார் ஓட்டல் ரூமில் அந்த பெண் உங்களுக்காக காத்திருக்கிறார் என்று ,இன்னொரு மெசேஜ் வந்துள்ளது..!

லாட்ஜ் ரூம்
உடனே அந்த ஓட்டலுக்கு இளைஞர் சென்றால், அங்கிருந்த நபர்கள், ஓட்டலுக்குள் அந்தப் பெண்ணின் பாதுகாப்பு, ரூமுக்கு பணம் கொடுக்க வேண்டும், போலீசுக்கு ரூ.7.84 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசி, அந்த இளைஞரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை ஏமாற்றி உள்ளனர்.. அதற்கு பிறகுதான், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் தந்தார் இளைஞர்.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் முளைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்..!