சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் 3 கதிர் அறுக்கும் அரிவாள்கள்.. என்ன பலன் ஏற்படும்?
திருப்பூர்: காங்கேயம், சிவன்மலை கோவிலில் ஆண்டவர் உத்தரவு பொருளாக கதிர் அறுக்கும் மூன்று அரிவாள்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் முன் வைக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியிலுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டி தமிழகம் முழுக்க மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆண்டவர் உத்தரவு பெட்டியில் என்ன பொருளை கொண்டு வந்து வைக்க வேண்டும் என்று முருக பெருமானே பக்தர்கள் கனவில் தோன்றி சொல்வது வழக்கம்.
இந்த நிலையில்தான், நேற்று இந்த உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் மூன்று அரிவாள்கள் வைத்து பூஜை நடந்தது. விசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த வேலுசாமி என்ற 80 வயது பக்தரின் கனவில், முருகன் தோன்றி, இந்த பொருளை, ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிட்டு, பணித்தாராம்.
ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருளுக்கும், சமூகத்தில் நடைபெற உள்ள மாற்றங்களுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. தற்போது, மூன்று கதிர் அறுக்கும் அரிவாள் வைக்கப்பட்டுள்ளதை வைத்து பார்க்கும்போது, 3 வருடங்களுக்கு பிறகு இவ்வாண்டு நல்ல மழை பெய்துள்ளது, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போன்றவற்றை குறிப்பதோடு, விவசாயம் செழிக்கும் என்பதற்கான முன் குறிப்பாகும் என்கிறார்கள், கோவில் சிவாச்சாரியார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications