4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலியானதால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்
Recommended Video
திருப்பூர்: "4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சு இப்படி அநியாயமா செத்தே போய்ட்டான்.." என்று பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த வாவிபாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் நடேசன். இவர் ஒரு பனியன் தொழிலாளி, இவரது 4 வயது மகன் லோகேஷ்.

கடந்த 14 ஆம் தேதி லோகேஷுக்கு அதிக காய்ச்சல் வந்தது. அதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கே காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். இதனிடையே படையப்பா நகர் பகுதி மக்கள், ஊத்தக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாட்டர் பாட்டிலில் அவர்கள் அருந்தும் கலங்கலான குடிநீரை பிடித்து கொண்டு வந்து பார்வைக்கு வைத்தனர்.
பிறகு "குடிநீர், சாக்கடை , என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனாலதான் எங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதை பற்றி எத்தனையோ முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போ இந்த குழந்தையோட உயிர் அநியாயமா போயிடுச்சு. உயிரிழப்பிற்கு நியாயம் தேவை. அடிப்படை வசதிகளும் எங்களுக்கு உடனடியா தேவை" என்று ஆவேசத்துடன் மறியலின்போது சொன்னார்கள்.
இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். அவர்களிடம் பெண்கள் லிஸ்ட் போட்டு குறைகளை சொல்லி கொண்டே போனார்கள். பிறகு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications