துணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்
Recommended Video
திருப்பூர்: 9 வயசு குழந்தையை, துணி துவைக்கும் கல்லின்மேல் நீண்ட நேரம் உட்கார்ந்து காத்திருந்து, சீரழித்த செந்திலுக்கு 7 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
திருப்பூர் வவிப்பாளையம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சம்பவம் இது. பிப்ரவரி 23-ம் தேதி சாயங்காலம் 7 வயசு குழந்தை ஒன்று வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. இதனை பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் செந்தில் என்பவர் கவனித்து கொண்டே இருந்தார். செந்திலுக்கு வயசு 39.

சிறுமியை அழைத்து சாக்லெட் தருவதாக கூறி, அருகில் பாதி வேலை முடிந்த நிலையில் இருக்கும் ஒரு கட்டிடத்திற்கு கூப்பிட்டார். ஆனால் பயந்து போன சிறுமியோ, வீட்டுக்குள் ஓடிப்போய் ஒளிந்து கொண்டாள். ஆனாலும் செந்தில் விடவில்லை.
வீட்டு முன்னாடி இருந்த துணிதுவைக்கும் கல் மீது உட்கார்ந்து கொண்டார். சிறுமி எப்படா வெளியே வருவாள் என்று நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார். ரொம்ப நேரம் கழிச்சி சிறுமி பயந்து பயந்து வெளியே வந்திருக்கிறாள். அப்போது அவளை வலுக்கட்டாயமாக தூக்கிகொண்டு வீட்டின் உள்ளே சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விஷயம் வெளியே தெரிந்து, சிறுமி வீட்டில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு நடந்துவந்தது. இந்தநிலையில், தற்போது குற்றவாளி செந்தில் என்று உறுதி செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
செந்திலுக்கு 7 வருஷ ஜெயில், கூடவே 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவேளை செந்தில் 10 ஆயிரம் ரூபாய் கட்ட தவறினால், இன்னொரு வருஷம் சிறைதண்டனை அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி ஜெயந்தி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications