கணவர் செக்ஸ் தொல்லை.. 2 குழந்தைகளை தவிக்க விட்டு.. இளம்பெண் தற்கொலை.. திருப்பூரில் சோகம்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கணவனின் செக்ஸ் தொந்தரவை தாங்க முடியாமல் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான விவரம் பின்வருமாறு:- திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்த ஆறுமுகம்.
Recommended Video
இவரது மகன் பிரபு(26). அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் . இவர் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்தில் நவக்காடு ஊராட்சி ஒருக்காம்பாளையத்தை சேர்ந்த நந்தினி என்கிற பானுப்பிரியா(23 ) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

காதல் மலர்ந்தது
ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது . இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் . திருமணத்திற்கு பின்னர் பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேலை முடிந்ததும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார் .

மதுபோதையில் கணவர்
இதனால் நந்தினி கணவருடன் கோபித்துக்கொண்டு அவ்வப்போது குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விடுவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபு மது குடித்து விட்டு வந்து நந்தினியிடம் தகராறு செய்துள்ளார் . இதனால் நந்தினி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார் . இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒருக்காம்பாளையம் சென்று தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார் . இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு விட்டு குழந்தைகளுடன் நந்தினி படுத்து தூங்கினார். பிரபுவும் மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார் .

குழந்தையின் அழுகுரல்
நள்ளிரவு நேரம் நந்தினியின் மகள் ஈஸ்வரி தூக்கத்தில் விழித்து எழுந்தாள் . அப்போது நந்தினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார் . இதனால் அந்த குழந்தை அழுது கொண்டே தாயின் காலை அங்கும் இங்கும் ஆட்டியுள்ளது . ஆனால் நந்தினி இறந்து விட்டார் என்று குழந்தைக்கு தெரியாததால் , அந்த குழந்தை வீட்டிற்கு வெளியே வந்து நள்ளிரவு நேரம் அழுது கொண்டே இருந்தது . மதுபோதையில் இருந்த தால் பிரபு எழுந்திருக்கவில்லை. நள்ளிரவு நேரத்தில் நீண்ட நேரமாக குழந்தை அழுகுரல் கேட்கிறதே என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எழுந்து சந்தேகத்தின் பேரில் வெளியே வந்து பார்த்த னர்.

தூக்குபோட்டு தற்கொலை
தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு நிர்வாண நிலையில் நந்தினி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி குன்னத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . உடனே விரைந்து வந்த போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

போலீசார் விசாரணை
நந்தினிக்கு தொடர்ந்து பிரபு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதன் காரணமாக நந்தினி தற்கொலை செய்து கொண்டதாகவும் நந்தினியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிரபுவிடமும், அவரது தந்தையிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications