பக்கவாட்டில் மோதிய லாரி.. திடீரென கழண்டு விழுந்த ஹெல்மெட்.. அவினாசியை அலற வைத்த விபத்து
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற ரம்யா என்ற இளம்பெண் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த நாதம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருடய மகள் ரம்யா , இவருக்கு 21 வயது ஆகிறது. ரம்யா அவினாசியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

புதன்கிழமையான நேற்று ரம்யா, தனது ஸ்கூட்டரில் நாதம்பாளையத்திலிருந்து அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவினாசி மெயின் ரோடு சீனிவாசபுரம் அருகே வந்தார். அவருக்கு பின்னால் வேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் லாரி ஓட்டுநர் ஸ்கூட்டரின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று தனியாக விழுந்தது.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரம்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்த விபத்து குறித்த புகார் அளிக்கப்பட்டது. அத்ன் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜா மகன் ரமேசை (24) கைது செய்தனர்.
தலைகவசம் அணிந்திருந்தும் அது கழண்டு விழுந்த காரணத்தால் இளம் பெண் ரம்யா உயிரிழந்துள்ளார். தலைகவசம் அணியுபவர்கள் கண்டிப்பாக அதை சரியாக அணிய வேண்டும். தலையில் மாட்டிவிட்டு அதனை லாக் செய்தால் மட்டுமே ஹெல்மெட் அணிந்தும் பயனாக இருக்கும். மாறாக ஹெல்மெட்டில் தலையை சரியாக லாக் செய்யாமல் விட்டால், பெரும் விபத்து ஏற்படும் போது, நாம் தப்பிக்க வழி இல்லாமல் போய்விடும்.
அதேபோல் ஹெல்மெட்டை வாங்கி அணியாமல் விடுவதும் ஆபத்தில் போய் விடும். இளம் பெண் ரம்யா ஹெல்மெட்டை லாக் செய்யாமல் வந்தாரா அல்லது எப்படி என்பது கண்டிப்பாக நமக்கும் தெரியாது. எனினும் நாம் ஹெல்மெட் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
லாரி ஓட்டுபவர்களும் ஊருக்குள் வரும் போது மிதமான வேகத்தில் வருவதே நல்லது.பிரேக் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதனால் அநியாயமாக யாராவது உயிர் இழக்க நேரிடும். எனவே லாரி ஓட்டுநர்களும் கவனமாக செல்ல வேண்டும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications