இந்த அவசரம் எதுக்கு? முந்த முயன்ற இளைஞர் லாரியில் சிக்கி பலி.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்
திருப்பூர் : திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் லாரியில் சிக்கி பரிதமாக உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிவேகமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்குவதும் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி உயிர் பலி ஏற்படும் வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது.
போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் திருப்பூரில் வாகனத்தை முந்திச் செல்ல முயன்று விபத்தில் சிக்கிய இளைஞர் உயிர் பரிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலை விபத்து
திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா தனது இருசக்கர வாகனத்தில் வேலை நிமித்தமாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மன்னரை அருகே வந்தபோது அவருக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல கார்த்திக் ராஜா வாகனத்தை அதிவேகமாக இயக்கியுள்ளார்.

சாலை பணிகள்
அப்போது எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்ததால் தனது வாகனத்தை நிறுத்த கார்த்திக் ராஜா முயன்று உள்ளார். அப்போது அந்த சாலையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக கற்கள் நிரம்பிய அந்த சாலையில் வாகனத்தை நிறுத்த முயன்றபோது வாகனம் திடீரென சாய்ந்தது.

தலையில் ஏறி இறங்கிய லாரி
இடது புறமாக வாகனத்தோடு கார்த்திக் ராஜா விழுந்த நேரத்தில் அவ்வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று அவரது மேல் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் கார்த்திக் ராஜா பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார் உடன் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முயன்ற போது சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திலேயே கார்த்திக் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் ராஜா விபத்துக்குள்ளான காட்சிகள் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகள் வெளியீடு
அந்த காட்சிகளை கைப்பற்றியுள்ள திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கார்த்திக் ராஜாவின் உடல் மீட்கப்பட்டு காவல் துறையினர் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications