பல்லடம் அருகே பாஜக நிர்வாகி மீது ஜேசிபி இயந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூரில் தொழில் போட்டி காரணமாக ஜேசிபி இயந்திரத்தை பாஜக நிர்வாகி மீது ஏற்றியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு விடுவதில் ஏற்பட்ட போட்டி மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்னைகள் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள பொங்கலூரில் செல்வகுமார் என்பவர் ஜேசிபி உள்பட பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஓ. பி .சி. அணி நிர்வாகியாக உள்ளார்.

இதேபோல் பொங்கலூரில் எஸ்.ஏ.பி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவரும் ஜேசிபி பொக்லைன் எந்திரம் வைத்து வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்து வந்ததாக எஸ்ஏபி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாக்கடை அமைப்பதில் கதிரவனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது வந்தது.
மேலும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2 பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்ததாம். இதேபோல் சாக்கடை கால்வாய் தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை கதிரவரின் பொக்லைன் எந்திரத்தை கொண்டு வசந்த் என்பவர் சாக்கடை கால்வாயை மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது. இதற்கு செல்வகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துத்துள்ளார்.
ஆனாலும் சாக்கடை கால்வாயை மண் கொட்டி மூடிக்கொண்ட இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த செல்வகுமார் பொக்லைன் வாகனத்தின் குறுக்கே நின்று கொண்டு, அதனை தடுத்து ஆபரேட்டர் வசந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கு சென்ற கதிரவன் தனது பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுனர் வசந்திடம், எதிரே நின்று கொண்டிருந்த செல்வகுமார் மீது ஏற்றும் படி கூறினாராம்.வசந்த் மறுத்ததால் அவரை இறக்கி விட்ட கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்.பலமாக மோதியதில் செல்வகுமார் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தார்கள். அப்போது கதிரவன், வசந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அப்பகுதியினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இந்த கொடூர கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக படம் எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் கதிரவன், வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா இந்த வழக்கு குறித்து நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications