கடல் முதல் ஆகாயம் வரை காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது.. திருப்பூரில் மோடி அதிரடி பேச்சு
திருப்பூரில் இன்று பாஜக சார்பாக நடத்தப்படும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
Recommended Video

திருப்பூர்: இந்தியாவை இத்தனை வருடம் ஆண்ட பாஜக கடல் முதல் ஆகாயம் வரை ஊழல் செய்துள்ளது என்று திருப்பூரில் பேசிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பிரதமர் மோடி, இந்த வருடத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழகம் வந்துள்ளார். சென்ற முறை, எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தார்.
அதன்பின் திருப்பூர் பெருமாநல்லூரில் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இதற்காக பெருமாநல்லூரில் பெரிய அளவில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. பாஜக சார்பில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பொதுக்கூட்டங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

தமிழில் தொடங்கினார்
திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். பிரதமர் மோடியின் பேச்சை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்த்தார்.

திருப்பூர்
பிரதமர் மோடி தனது பேச்சில், கடுமையாக உழைக்கும் மக்களை கொண்டது திருப்பூர். தொழில்முனைவோர் நிறைந்த மண்ணை கொண்டது இந்த திருப்பூர். கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம். தொழில்முனைவோர் பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர், நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது.

விமானம்
நமோ என்ற செய்தியை தாங்கி வரும் டி-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டதுதான்.தீரன் சின்னமலையும், திருப்பூர் குமரனும் பிறந்த ஊர் இது. வரலாற்றில் சுதந்திர தாகம் எப்போதும் உள்ள ஊர் திருப்பூர். திருச்சியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னையிலும் விமான நிலைய விரிவாக்க பணிகள் இன்று துவங்கி உள்ளது.

மெட்ரோ
சென்னையில் புதிய மெட்ரோ சேவைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது பல்வேறு முன்னேற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். குமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது.

காங்கிரஸ் ஊழல்
பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்த விதமான பலனும் ஏற்படவில்லை. காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலை கொண்டது இல்லை. கடல் தொடங்கி ஆகாயம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர். புரோக்கர் ஆட்சியை காங்கிரஸ் நடத்திக் கொண்டு இருந்தது, என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications