Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேண்டாம்னு நெனச்சேன்.. இருந்தாலும் சொல்றேன்.. எனக்கும் எம்ஜிஆருக்கும் ஒரு ஒற்றுமை.. அண்ணாமலை பேச்சு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: எம்ஜிஆருக்கும் எனக்கும் ஒரே ஒரு ஒற்றுமை உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் கோவில்வழி அருகில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேம்பாட்டு பணிக்காக ரூபாய் 2.40 லட்சம் நிதியையும் உபகரணங்களையும் வழங்கியிருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு அநாகரிகமாக மாறி வருகிறது. இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு பாஜகவினர் பொறுப்பான பதில் அளிப்பார்கள்.

ராகுல் காந்தி நடைபயணம்

ராகுல் காந்தி நடைபயணம்

ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு கிடைத்த "வெற்றியை" குஜராத் தேர்தலில் பார்த்துவிட்டோம். சாமானிய மக்களை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கு் நிலை ஏற்பட்டுள்ளது. இது போல் எம்ஜிஆரை கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இன்று என்னை கேட்கிறார்கள். முதல்வரின் குடும்பம் மற்றும் 13 அமைச்சர்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம்.

2 லட்சம் கோடி ஊழல்

2 லட்சம் கோடி ஊழல்

இதன் மூலம் மட்டுமே 2 லட்சம் கோடி ஊழல் வெளிவந்துள்ளது. திமுகவினர் தொட்டுவிட்டார்கள். முடிவுரையை பாஜக எழுதபோகிறது. 2ஜி ஊழலால் திமுக மற்றும் காங்கிரஸுக்கு முடிவுரை எழுதப்பட்டதோ அது போல் நாங்கள் கேட்கும் கேள்வி திமுகவிற்கு முடிவுரை எழுதும். தமிழகத்திலிருந்து எத்தனை எம்பிக்களை தர உள்ளோம் என்பதுதான் கேள்வி.

 13 ஆண்டுகள்

13 ஆண்டுகள்

எண்ணம் வாக்காக மாற கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 13 ஆண்டுகள் நான் சம்பாதித்த முழு கணக்கையும் கொடுக்கிறேன். எனக்கு 18 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை ஊதியம் கிடைத்துள்ளது. 13 லட்சம் ரூபாயை கிரெடிட் கார்டுக்கு பில் கட்டியுள்ளேன். திமுக அமைச்சர், எம்எல்ஏக்களின் என்ஜினியரிங் கல்லூரி உள்ளிட்ட 150 ஏக்கர் நிலம் உள்ளிட்டவைகளின் தகவல்களையும் வெளியிடுவேன்.

ஒற்றுமை

ஒற்றுமை

எம்ஜிஆருக்கும் எனக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒப்பீட்டை எனக்கு கருப்பு முருகானந்தம் கூறினார். ஆனால் நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். இருந்தாலும் சொல்கிறேன். திமுக எம்ஜிஆரை கிண்டல் செய்தது வாட்ச் வைத்துதான். அதில் வைரம் உள்ளது. ஒட்டு கேட்க முடியும் என பொய்யான தகவலை பரப்பினர். இப்போது என்னையும் வாட்சை வைத்து கிண்டல் செய்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு 120 கோடியில் வீடு எப்படி வந்தது என கேட்போம்.

வக்கீலுக்கு ஊதியம்

வக்கீலுக்கு ஊதியம்

சாராய அமைச்சருக்கு வழக்கில் ஆஜராகும் வக்கீலுக்கு ஒரு சிட்டிங்கிற்கு 25 லட்சம் ரூபாய் எப்படி கொடுக்கப்படுகிறது. அந்த பணம் எங்கே இருந்து வந்தது என்றெல்லாம் கேட்போம். நமக்கு திமுக ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. அதை வைத்து திமுகவின் ஒட்டுமொத்த ஊழலையும் வெளியே கொண்டு வருவோம். இந்தியாவில் ஊழலில் நம்பர் 1 தமிழ்நாடுதான். தமிழகத்தில் ஊழலை எதிர்க்கும் ஒரே கட்சி பாஜகதான். உதயநிதி அல்ல இன்பநிதி வந்தாலும் வாழ்க என கே.என்.நேரு சொல்கிறார். நீங்கள் அடிமையாக இருக்க தயாராக உள்ளூர்கள், தமிழகம் அடிமையாக இருக்க முடியாது. மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தால் அப்படி பேசுகிறார்கள். திருமண வீட்டில் ஆவின் வருவாய் உயர்ந்துள்ளது என முதல்வர் பேசுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+