அந்த பாஜக பிரமுகர்தான் எல்லாத்துக்கும் காரணம்.. மொத்தம் 7 பேராமே.. தூக்கிய போலீஸ்.. திருப்பூர் ஷாக்
இளைஞரை கடத்திய பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகிறார்கள்
திருப்பூர்: ஆள் கடத்தல் விவகாரத்தில் ஒரு பாஜக பிரமுகர் ஈடுபட்டு வந்துள்ளார்.. இதையடுத்து, ஒரு போலீஸ்காரர், முன்னாள் ஆயுதப்படை காவலர் உட்பட 7 பேர் கைதாகி உள்ளனர்.. எல்லாவற்றிற்கும் மூல காரணமான பாஜக பிரமுகர் எஸ்கேப் ஆகி உள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்.. 35 வயதாகிறது.. இவர் ஒரு கார் டிரைவர்... திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்..
சம்பவத்தன்று கோவை-பல்லடம் சாலையில் பெரும்பாளி பகுதியில் செல்லும்போது, 7 பேர் கொண்ட கும்பல் 3 கார்களில் மகேஸ்வரனை வழிமறித்தது.. அவரை கத்திமுனையில் கடத்தியும் சென்றுவிட்டது.

பாஜக விவசாய அணி செயலாளர்
இதையடுத்து இந்த கடத்தல் தொடர்பாக பல்லடம் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது... அப்போதுதான் குட்லக் ராஜேந்திரன் பெயர் அடிபட்டது.. இவர் ராமநாதபுரம் மாவட்ட பாஜகவின் விவசாய அணி செயலாளராக உள்ளார்.. இவரும், இவரது கூட்டாளிகளும் சேர்ந்துதான் மகேஸ்வரனை கடத்தியது தெரியவந்தது.

பாஜக பிரமுகர்
அதாவது, அந்த பாஜக பிரமுகர், தங்க பிஸ்கெட்டுகளை கடத்துபவராம்.. இலங்கையில் இருந்து தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதுதான் குட்லக் ராஜேந்திரனின் பிரதான வேலை.. இப்படி கடத்தி வரப்பட்ட பிஸ்கெட்டுகளை, வியாபாரிகளிடம் கொண்டு போய் சேர்க்கவே, மகேஸ்வரனை வேலைக்கு வைத்துள்ளார். இப்படித்தான், கடந்த வருடம் மகேஸ்வரனிடம் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை குட்லக் ராஜேந்திரன் தந்து, யாரோ ஒருவரிடம் போய் ஒப்படைக்க சொன்னாராம்..

தங்க பிஸ்கட்
அதன்படியே அந்த பிஸ்கட்டுகளை வாங்கி கொண்டு மகேஸ்வரன் சென்றபோது, போலீசார் அவரை துரத்தியதாகவும், அதனால், தங்க பிஸ்கட்களை ரோட்டிலேயே தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் குட்லக் ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளார்... ஆனால், இந்த காரணத்தை குட்லக் ராஜேந்திரன் ஏற்கவில்லை.. மகேஸ்வரன் பொய் சொல்வதாக நினைத்து, தங்கம் கடத்தி வர முதலீடு செய்து இருந்த யாசர் அராபத், முகமது ரிஸ்வான் ஆகியோரிடம் மகேஸ்வரனை ஒப்படைத்துள்ளார்...

வாடகை வீடு
ஆனால் அவர்களிடம் இருந்து மகேஸ்வரன் 2 மாசத்துக்கு முன்பு தப்பிஓடி வந்துவிட்டார்.. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.. இந்த விஷயம் குட்லக் ராஜேந்திரனுக்கும், அடைத்து வைத்த யாசர் அராபத், முகமது ரிஸ்வானுக்கும் எப்படியோ தெரிந்துவிட்டது.. பின்னர் மகேஸ்வரனை கடத்த திட்டமிட்டனர்...

காவலர்கள்
அதன்படியேதான், தங்களுக்கு தெரிந்த கோவை மாநகர போலீசில் பணியாற்றும் காவலர் ராஜேஸ்வரன் மற்றும் குட்லு, அன்பு, கார்த்தி, பாண்டி மற்றும் சிலருடன் திருப்பூர் வந்து மகேஸ்வரனை கடத்தி சென்றனர்... திண்டுக்கல் பகுதியில் செல்லும்போது போலீசார் துரத்துவதை அறிந்ததும் முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் மற்றும் போலீஸ்காரர் ராஜேஸ்வரன் ஆகிய 3 பேரையும் இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

ஆயுதப்படை
அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்களைத் தொடந்து, ஆயுதப்படையில் இருந்து பணி நீக்கம் செயப்பட்ட காவலர் கார்த்தி உள்ளிட்ட மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், எல்லாவற்றிற்கும் மூலகாரணமான பாஜகவின் குட்லக் ராஜேந்திரனை இப்போது காணவில்லை.. எங்கோ தலைமறைவாகி உள்ளதால், அவரை தேடும் பணி நடக்கிறது.. அவரை பிடித்தால்தான் கடத்தல் தங்க பிஸ்கட்டுகள் குறித்த மேலும் தகவல்கள் தெரியவரும் என்கிறார்கள்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்!












Click it and Unblock the Notifications