தாராபுரத்தில் திமுகவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பாஜக... இரவோடு இரவாக கிழித்துவீசப்பட்டதால் சர்ச்சை
திருப்பூர்: தாராபுரத்தில் பாசன சபைகளுக்கான தேர்தலில் மற்ற யாரும் போட்டியிட முடியாதவாறு திமுகவினர் தவிர மற்றவர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக பாஜக சார்பில் நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்கள் இரவோடு இரவாக கிழிக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, பிஏபி, உப்பாறு பாசனத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் பாசன சபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தாராபுரம் வட்டத்தில் உள்ள 31 பாசன சபை தலைவர்கள் மற்றும் 136 ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களுக்களுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 8 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த பதவிகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் திமுகவினர் தவிர்த்து மற்றவர்களின் மனுக்களை வாபஸ் பெற வைத்தும், சார் ஆட்சியரை கொண்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் போட்டியின்றி அக்கட்சி வெற்றி பெறும் வகையில் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி சிவக்குமார் உப்பாறு பாசன சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் சிவகுமாரின் வேட்புமனுவை நிராகரித்தார். இதனை கண்டித்து கடந்த 9 ஆம் தேதி விவசாயிகள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாகினர்.

Recommended Video
இந்நிலையில் திமுகவினர் பாசன தேர்தலில் தலையிட்டு குளறுபடி செய்வதாக குற்றம்சாட்டி பாஜகவினர் நகரம் முழு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவை அனைத்தும் இரவோடு இரவாக கிழிக்கப்பட்டன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications