பரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்!
Recommended Video
பல்லடம்: பைக்.. கார்.. ஆட்கள் என எல்லாரையும் அடித்து நொறுக்கி கொண்டு வந்த அந்த காரை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டே ஓட்டம் பிடித்தனர்!
பல்லடம், மகாலட்சுமிநகர் சாலையில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. மணி 7.20 இருக்கும்.. ரோடு படு பிஸியாக உள்ளது. சாலையோர டீக்கடையில் நிறைய பேர் நின்று டீ குடித்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த இடத்தில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருக்கிறது. அதில்தான் ஒரு கோர விபத்து நடந்துள்ளது. காலை நேரம் என்பதால் வாகனங்கள் நிறைய போய் கொண்டிருக்கின்றன.
அப்போது ஒரு வெள்ளை நிற கார் வேகமாக வருகிறது. வரும்போதே கட்டுப்பாட்டை இழந்ததால், கன்னாபின்னாவென்று டீக்கடை நோக்கி பாய்கிறது. சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது முதலில் இடித்து தள்ளுகிறது.
பிறகு அதே வேகத்துடன், டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதுகிறது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக், மற்ற வண்டிகளும் பொத் பொத்தென்று விழுகின்றன. அங்கு டீ குடித்து கொண்டிருந்தவர் மீதும் ஒரு இடி இடித்துவிட்டு அந்த கார் பேக்கரிக்குள் நுழைந்து நிற்கிறது. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது.

பைக்கில் வந்தவர்கள் என்ன ஆனார்கள், சாலையில் போய்க் கொண்டிருந்தவர்களில் எத்தனை பேர் மீது கார் இடிக்கப்பட்டது, வேனுக்குள் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்.. இதெல்லாம் தெரியவில்லை. எப்படியோ உயிரிழப்போ, படுகாயமோ ஏற்பட்டிருக்கும் என்று மட்டும் தெரிகிறது.
இதை கண்ணால் பார்த்த மக்கள், இங்கும் அங்கும் சிதறி ஓடுகிறார்கள்... இடித்து தள்ளப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று பதறிக் கொண்டு பார்க்கிறார்கள்.. இந்த சிசிடிவி காட்சியை பார்க்கவே ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. இந்த வீடியோவும் வைரலாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications