Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் சாமிநாதன் தந்தை மறைவு.. போனில் அழைத்து ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர் பெருமாள்சாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர்கள் தந்தை சா. பெருமாள்சாமி (94). தாயார் தங்கமணி. சாமிநாதன் தனது குடும்பத்தினரோடு சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் சாமிநாதனின் தந்தை பெருமாள்சாமி வயது மூப்பால் காலமாகியுள்ளார்.

Chief Minister Stalin has condoled the death of Minister MP Saminathans father Perumalsamy

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் சாமிநாதனின் தாயார் தங்கமணி இறந்த நிலையில் தந்தை பெருமாள் சாமி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சமீப நாட்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை பெருமாள் சாமி உயிரிழந்தார்.

மறைந்த பெருமாள்சாமிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உட்பட 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பெருமாள்சாமியின் இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான முத்தூர் வேலம்பாளையத்தில் உள்ள அமைச்சர் சாமிநாதனின் பூர்வீக வீட்டில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளராக இருந்து வந்த மு.க.ஸ்டாலின் அப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து மு.பெ.சாமிநாதன் என்னும் வெள்ளகோவில் சாமிநாதன்இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சாமிநாதன் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

தற்போது, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறார் மு.பெ.சாமிநாதன். மேலும், 2021 சட்டசபை தேர்தலில் காங்கேயம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆன நிலையில், செய்தித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், தமிழ் வளர்ச்சி துறையும் கூடுதலாக சாமிநாதன் வசம் வழங்கப்பட்டது. முன்னதாக, கடந்த 2006 கருணாநிதி ஆட்சியில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகித்தார் சாமிநாதன்.

Chief Minister Stalin has condoled the death of Minister MP Saminathans father Perumalsamy

அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை பெருமாள்சாமி மறைவையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் , "தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.

தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+