குழந்தைகளை பள்ளி பேருந்தில் அனுப்பிய போது விபரீதம்.. அதே பள்ளி பேருந்தால் துடிதுடித்து இறந்த தாய்
திருப்பூர்: திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு அருகில் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் மீது அதே பள்ளியின் பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த தாய், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்து ஆவேசம் அடைந்த உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மண்ணரை பாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் 41 வயதாகும் செல்வராஜ் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவருடைய மனைவி ராதா (32). இவர்களுக்கு மனோஜ் (15) என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், ரித்திகா (12) என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கிறார்கள்.

ராதா நேற்று காலை திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளியில் தனது மகன், மகளை விடுவதற்காக ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் இருவரையும் பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தள்ளார்
அப்போது கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில், பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த அதே பள்ளியின் பேருந்து எதிர்பாராத விதமாக ராதாவின் ஸ்கூட்டரை இடித்து தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த ராதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் ராதாவின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் உயிரிழந்த ராதாவின் உறவினர்கள் திரண்டு உரிய நியாயம் வேண்டும் என வலியுறுத்தி ராதாவின் உடலை அப்புறப்படுத்த விடாமல் போலீசாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் போலீசார் சமாதானம் செய்து ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications