ஆந்திராவில் ஒரு யூனிட் மணல் ரூ.1400.. தமிழ்நாட்டில் 7500 ரூபாய்.. கட்டுமான பொறியாளர்கள் புகார்
திருப்பூர்: கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டரிடம் இன்ஜினீயர்கள் மனு அளித்துள்ளனர். 3 யூனிட் எம்.சாண்ட் மண்ணை ரூ.10 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியுள்ளனர். ஆந்திராவில் 1 யூனிட் ரூ.1,400-க்கு அரசு கொடுக்கிறது என்றும், தமிழகத்தில் அடிக்கடி விலையேற்றத்தால் கட்டுமான பணியை விரைந்து முடிக்க முடியவில்லை என்றும் இன்ஜினியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் குறைவான எண்ணிக்கையில் செயல்படுவது ஒரு புறம் எனில், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்வதற்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததின் பேரில், ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் அண்மையில் உயர்த்தப்பட்டது.

கடைசியாக உயர்த்தப்பட்ட விலையுடன் ஒப்பிட்டால், கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட் விலை மட்டும் கடந்த 8 மாதங்களில் 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்கள் இந்த விலை உயர்வை தாங்கவே முடியாத அளவிற்கு இருப்பதாக போர்க்கொடி உயர்த்தின. புதிய வீடுகளை கட்டுபவர்கள் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத விலை உயர்வை சந்தித்தனர். ஏனெனில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என்பது ஒரே ஆண்டில் 30 சதவீதம் அளவிற்கு அதிகம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், க்ரஷர் உரிமையாளர்களை அழைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எம்.சாண்டு, பி.சாண்டு மற்றும் ஜல்லியின் உயர்த்தப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்க உத்தரவிடப்பட்டது. இதேபோல் சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன் ஒன்றுக்கு ரூ.33 என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எனினும் எம் சாண்ட் மற்றும் ஜல்லி விலையை ரூ.1900 ரூபாய் உயர்த்திவிட்டு, ஆயிரம் ரூபாய் மட்டுமே குறைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையிலேயே குற்றம் சாட்டினார். இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் தமிழக இன்ஜினீயர்கள் கிளப் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், கிரசர் உரிமையாளர்கள் ஒரு வருடத்தில் 4 முறை விலையை ஏற்றி 3 யூனிட் எம்.சாண்ட் மண்ணை ரூ.10 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியுள்ளனர். ஆந்திராவில் 1 யூனிட் ரூ.1,400-க்கு அரசு கொடுக்கிறது. அடிக்கடி விலையேற்றத்தால் கட்டுமான பணியை விரைந்து முடிக்க முடியவில்லை. கட்டுமான பொருட்கள் விலை நிரந்தரமாக இல்லாததால் கட்டுமான தொழில் நிலையற்றதாக மாறி வருகிறது.
கட்டுமான தொழில் சீராக நடக்க கல் குவாரிகளை அரசுடைமையாக்கி அரசே ஏற்று நடத்த வேண்டும். கட்டுமான துறை சார்ந்த அனைத்து பொருட்களின் விலையை அரசு நிர்ணயிக்க கட்டிட பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை அரசு நிர்ணயம் செய்யாவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications