திருப்பூர்: கொரோனாவிலும் ஒரே ஜாலி தான்.. உல்லாசமாக உலா வரும் முதலைகள்
திருப்பூர்: கொரோனாவிலும் ஒரே ஜாலி தான்.. உல்லாசமாக உலா வரும் முதலைகள்
Recommended Video
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதியில் உள்ள முதலைப்பண்ணையில் உள்ள முதலைகள், கொரோனா வைரஸ் காரணமாக உல்லாசமாக உலா வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் அமராவதியில் முதலைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறிய குட்டிகள் முதல் பெரிய முதலைகள் வரை இங்கு வளர்க்கப்படுகின்றன.

இந்த முதலைப்பண்ணையில் உள்ள முதலைகளை காண தமிழகத்தில்இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். மேலும் பள்ளிக்குழந்தைகள் பலர் நேரில் கண்டு ரசிப்பதுடன், முதலைகளின் வளர்ப்பு குறித்து தெரிந்து கொள்வர்.
கடந்த மார்ச் முதல் கொரோனா காரணமாக முதலை பண்ணையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எந்தவித தொந்தரவும் இன்றி கொரோனா ஊரடங்கு காலத்தில் முதலைகள் உல்லாசமாக உலா வருகின்றன.












Click it and Unblock the Notifications