அந்த வீடியோவில் திடீர்னு தோன்றிய திருப்பூர் சத்யா.. பதறிய புது மாப்பிள்ளை.. 40+ டார்கெட்.. 53 கணவன்?
திருப்பூர்: தாராபுரம் சத்யா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இது தொடர்பான விசாரணையில் தொடர்ந்து திருப்பூர் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொடிமுடியை சேர்ந்த 30 வயது சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. எனினும், திருமணமாகாத இளைஞர்களை குறிப்பாக, வசதி படைத்த இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து மோசடி செய்து வந்திருக்கிறார்.

திருமணம்: அந்தவகையில், தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர் சத்யாவின் வலையில் விழுந்து, சத்யாவை 10 நாளைக்கு முன்பு திருமணமும் செய்துள்ளார்.
சத்யா பெயரை ரேஷன் கார்டில் பதிவதற்காக முனைந்தபோதுதான், கணவர் என்று வேறொருவரின் பெயர் பதிவாகியிருந்ததை கண்டு பேக்கரி ஓனர் அதிர்ச்சி அடைந்தார்.. இதனால் கொடிமுடிக்கே நேரடியாக சென்று சத்யாவை பற்றி விசாரித்தபோதுதான், அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.. பின்னர், தாராபுரம் மகளிர் போலீசில் புகார் தரப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த சத்யாவை போலீசார் தேடி வந்தனர்.
மோசடிகள்: திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்.பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவரைகள் என 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சத்யாவை தீவிரமாக தேடிவந்த போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.. சத்யா கைது செய்யப்பட்டதையடுத்து, அவரால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் தாராபுரம் போலீசில் புகார் தந்து வருகிறார்கள்.
மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள ஆண்களின் போன் நமபருக்கு சத்யா போன் செய்து பேசுவாராம்.. அவர்களை மயக்கி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றும், ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியும் உல்லாசமாகவும் இருப்பாராம். இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பறிப்பாராம் சத்யா.
ஆபாச வீடியோ: ஆபாச வீடியோவுக்கு பயந்து, சத்யா கேட்கும் பணத்தை அவர்களும் தந்துள்ளனர்.. திருமணமான ஆண்களும், குடும்ப மானத்துக்கு பயந்து, சத்யா கேட்கும் பணத்தை வாரி வழங்குவார்களாம். சிலரிடம் சொத்துக்களையும் மிரட்டி எழுதி வாங்கியிருக்கிறாராம் சத்யா.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சத்யாவை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சத்யா போலீசாரிடம் விடுத்த வேண்டுகோள் ஒன்று வீடியோவாக சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
திருப்பூர் சிறைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, போலீசாரை பார்த்து சத்யா, "சார்.. என் குடும்பத்தை பற்றி தப்பா எழுதுறாங்க.. என் அப்பா தற்கொலை செய்து விட்டார் என்றெல்லாம் எழுதிவிட்டார்கள். இதைவிட வேறென்ன இருக்கு சொல்லவும் செய்யவும்? காசு உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை நிரூபித்துவிட்டார்கள். நான் வெளியே வந்தபிறகு என் மீது தவறு கிடையாது என்று நிரூபிக்கும் எல்லா ஆதாரங்களையும் காட்டுகிறேன்.. ஆனால், தயவுசெய்து என்னுடைய குடும்பத்தை மட்டும் அசிங்கப்படுத்தாதீங்க" என்றார்.
அப்போது சத்யா முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார்.. ஆனாலும் அழுதபடியே போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.. சத்யா அவ்வாறு சொன்னதுமே போலீசார், அப்படியெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம்" என்றனர்.
புதுக்கணவர்: அதேபோல, இன்னொரு புதிய தகவல் சத்யா குறித்து வெளியாகி உள்ளது.. அதாவது, திருமணம் நடைபெற்ற 2 நாளில் சத்யாவின் செல்போனை அவரது புதுக்கணவர் அதாவது பேக்கரி ஓனர் பார்த்துள்ளார்.
அந்த செல்போனிலிருந்த போட்டாக்களை பார்த்ததுமே, அவருக்கு தலை சுற்றிவிட்டதாம்.. அதில் சத்யா பல ஆண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் இருந்திருக்கின்றன.. இவர்கள் எல்லாம் யார்? என்று சத்யாவிடம் கேட்டிருக்கிறார். சத்யா அதற்கு பதில் சொல்ல மறுக்கவும்தான், இருவருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது.
மன உளைச்சல்: வழக்கமாக, ஒவ்வொரு பதிவு திருமணத்துக்கு பிறகும் ஏதாவதொரு பிரச்சினையை கிளப்பி சம்பந்தப்பட்ட மாப்பிள்ளையை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்கள் வாயாலேயே விவாகரத்து கேட்கும் அளவுக்கு சாமார்த்தியமாக பேசுவாராம் சத்யா.. ஆனால், இப்போதுதான் முதல்முறையாக, பேக்கரி ஓனரே சத்யாவின் வண்டவாளத்தை கண்டுபிடித்திருக்கிறார். சத்யாவின் சுயரூபம் செல்போனில் தெரிந்தபிறகுதான், போலீசுக்கு சென்று புகார் தந்தாராம்.
எனவே, சத்யா பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் இருக்கிறதா என்று, அவரது செல்போனை பறிமுதல் செய்து, ஆய்வையும் போலீசார் மேற்கொள்ள போகிறார்களாம். அத்துடன் புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச்செல்வியை கண்டுபிடித்தால்தான் இதுவரை சத்யாவை எத்தனை பேருக்கு திருமணம் செய்து வைத்தார் என்ற விவரமும் தெரியவரும் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications