Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் நைட்டியுடன்.. யாரிந்த பரிதாப பெண்? அழுதுட்டே உதவி கேட்டாராம்.. உலுக்கிய உடுமலை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: நைட்டி அணிந்த பெண் யார்? என்ற விசாரணையை மேற்கொண்டதில், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் தந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ளது மடத்துக்குளம்.. இங்குள்ள அமராவதி ஆற்றின் அருகே ராஜ வாய்க்கால் கரையில் கடந்த 25ம் தேதி பெண்ணின் சடலம் கிடப்பதாக மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Do you know Who is this Tirupur Nighty Woman and why did police take action against Tiruppur Udumalaipettai Couple

வாய்க்கால்: இதையடுத்து, போலீசார் வாய்க்கால் அருகே சென்று பார்த்தபோது, அந்த பெண் நைட்டி அணிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.. அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.. பிறகு, பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்த போலீசார், இறந்தவர் யார் என்ற விசாரணையையும் போலீசார் மேற்கொண்டனர்.

அப்போதுதான், உயிரிழந்தது கொழுமம் மேற்கு தெருவை சேர்ந்த 29 வயது பெண் என்பது தெரியவந்தது. அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது. அதில், அந்த பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. எனவே, கொலையாளி யார் என்ற அடுத்தக்கட்ட விசாரணையில் போலீசார் இறங்கினார்கள்.

பாண்டித்துரை: இறுதியில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவர் மீதும், அவரது கள்ளக்காதலர் பாண்டித்துரை மீதும் சந்தேகம் திரும்பியது. லட்சுமிக்கு 32 வயதாகிறது.. தனியார் பஸ் டிரைவரான கள்ளக்காதலனுக்கு 27 வயதாகிறது..

இவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, உண்மையை ஒப்புக் கொண்டனர்.. லட்சுமி வீட்டுக்கு வரும்போதெல்லாம் பக்கத்து வீட்டு பெண்ணின் மீதும் பாண்டித்துரையின் பார்வை விழுந்துள்ளது.. எனவே, அந்த பெண்ணை அடைய நினைத்து, தன்னுடைய விருப்பத்தை லட்சுமியிடமும் சொல்லி உள்ளார். இதற்கு லட்சுமியும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். இறுதியில், அந்த பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து கொன்றதை கள்ளக்காதல் ஜோடி, வாக்குமூலமாக தந்துள்ளனர்.

ஆனால், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் நாகமுத்து என்பவருடன் கடந்த 2 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது... இதனை அந்த பெண்ணின் கணவரும், குடும்பத்தினரும் கண்டித்திருக்கிறார்கள்.

கண்டித்த கணவன்: இது தொடர்பாக கடந்த 24ம் தேதிகூட, அந்த பெண்ணின் கணவர் சேகரும், உறவினர்களும், கொலை செய்யப்பட்ட பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.. குடும்பத்தினரிடம் அடி வாங்கிய பெண், அழுதுகொண்டே தான் அணிந்திருந்த நைட்டியோடு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்..

அப்போதுதான், பக்கத்து வீட்டை சேர்ந்த லட்சுமி இதனை பார்த்துள்ளார்... அழுதுகொண்டே அந்த பெண் தெருவில் செல்வதாக, பாண்டித்துரையிடம் சொன்னார் லட்சுமி.. இதுதான் சமயம் என்று, அந்த பெண்ணை தேடி பின்னாடியே சென்றிருக்கிறார் பாண்டித்துரை..

அழுதுகொண்டே உதவி: அழுதுகொண்டே நைட்டியுடன் சென்ற பெண்ணிடம் சென்ற பாண்டித்துரை என்ன ஏதென்றே கரிசனம் காட்டுவதுபோல விசாரித்துள்ளார்.. அதற்கு அந்த பெண், "மதுரையில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்.. என்னை மதுரைக்கு பஸ் ஏற்றி வைத்துவிடுங்கள்" என்று அழுதபடியே உதவி கேட்டாராம்.

உடனே பாண்டித்துரை அந்த பெண்ணை தன்னுடைய பைக்கில் ஏற்றிக்கொண்டு, மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் ராஜவாய்க்கால் பகதி வழியாக சென்றுள்ளார்.. அப்போதுதான், வாய்க்கால் பகுதியிலேயே பைக்கை நிறுத்திவிட்டு, அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாண்டித்துரை: அப்போது, பாண்டித்துரையிடமிருந்து தப்பி வர அப்பெண் முயன்றுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்து பாண்டித்துரை அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து, துணியால் கை, கால்களை கட்டி அமராவதி ராஜ வாய்க்காலில் போட்டுவிட்டு பைக்கில் தப்பிச்சென்றிருப்பது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து பாண்டித்துரையையும், அவருக்கு உதவி செய்த லட்சுமியையும் போலீசார் கைது செய்தனர்.

கொழுமத்தை சேர்ந்த லட்சுமியின் கள்ளக்காதலனான பாண்டித்துரைக்கு பெண்கள் மீது சபலம் அதிகமாம். எனவே, இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார்? என்ற விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+