திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்னதம்பியை கும்கியாக மாற்ற வேண்டாம்... யானை நல ஆர்வலர்கள் கோரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு

    திருப்பூர்: 100 கிலோ மீட்டர் தூரம் கடந்து உடுமலையை அடுத்த மைவாடியில் முகாமிட்டுள்ள சின்னதம்பி காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றிதிரிந்த சின்னதம்பி காட்டு யானை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிக்கப்பட்டு, கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு விடப்பட்டது.

    உடுமலையை அடுத்த மைவாடியில் முகாமிட்டுள்ளது. ரயில் நிலையம் அருகேயுள்ள கரும்பு காட்டில் இருக்கும் சினத்தம்பியை பிடிக்க, கும்கி யானை கலீம் வந்துள்ளது.

    கும்கி கலீம் வருகை

    கும்கி கலீம் வருகை

    காட்டுயானை சின்னதம்பியை, கும்கியானை கலீம் தான் வனத்துறையிடம் ஏற்கனவே பிடித்து கொடுத்தது. விநாயாக யானையை பிரிந்து தனியாக உலா வரும் சின்னதம்பி யாரையும் தாக்குவதில்லை என கிராம மக்கள் தெரிக்கின்றனர். இந்நிலையில், சின்னத் தம்பியை குறைந்த அளவு மயக்க மருத்து கொடுத்து பத்திரமாக பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மருத்துவ குழு வருகை

    மருத்துவ குழு வருகை

    100 கிலோ மீட்டர் தூரம் கடந்து உடுமலையை அடுத்த மைவாடிக்கு வந்துள்ள சின்னதம்பியின், உடல் நலத்தை கண்காணிக்க மருத்துவ குழுவும் அங்கு வந்துள்ளது. உடல் சோர்வுடன் கரும்பு தோட்டத்தில் யானை படுத்துள்ளது. நேற்று, மைவாடி ரயில்நிலையத்தில் புகுந்த சின்னதம்பியை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். பின்னர், யானை அங்கிருந்து அமைதியாக வெளியே சென்றுவிட்டது.

    மனஉளைச்சலில் சின்னதம்பி

    மனஉளைச்சலில் சின்னதம்பி

    குடும்பத்தை பிரிந்ததால், சின்னதம்பி காட்டுயானை மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படும் நிலையில் சின்னதம்பியை கும்பியாக மாற்ற யானை நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கும்கியாக மாற்றப்படும்

    கும்கியாக மாற்றப்படும்

    முன்னதாக, கோவையில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சின்னதம்பி விரைவில் பிடிக்கப்பட்டு கும்கி யானையாக மாற்றப்படும் என கூறியிருந்தார்.

    English summary
    Kumki Elephant kalim came to catch Chinnathambi elephant near tirupur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X