26 வயதில் கருணாநிதியை எதிர்கொண்டவன்.. இபிஎஸ்-லாம் எம்மாத்திரம்.. திருப்பூரில் சீறிய டிடிவி தினகரன்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தனது 26 வயதிலேயே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை எதிர்கொண்டவன் என்றும், எடப்பாடி பழனிசாமியெல்லாம் எம்மாத்திரம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் அரசியல் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த நிலையில் அமமுக சார்பாக ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து டிடிவி தினகரன் பேசுகையில், திமுகவை அமைச்சர் செந்தில் பாலாஜியே முடித்துவிடுவார். மீண்டும் திமுக ஆட்சி கவிழ்வதற்கு மின் கட்டண உயர்வு போதும்.

 மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்வு

கடந்த திமுக ஆட்சியில் தமிழக மக்கள் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போதைய திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால் மக்களை வாட்டி வதைக்கும் அளவிற்கு இருக்கக் கூடாது என்று விமர்சித்தார்.

 கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி முதலமைச்சர் ஸ்டாலினையே பொதுச்செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன், ஆனால் அவர்கள் திருந்தவில்லை. அதற்கான பலனை இப்போது அனுபவிக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துள்ளனர். விலை போகாதா சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் சிலர் உள்ளனர். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று பேசினார்கள். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது.

 இபிஎஸ்-லாம் எம்மாத்திரம்

இபிஎஸ்-லாம் எம்மாத்திரம்

ஆனால் எலி வலையானாலும் தனி வலை என்று அமமுக என்ற ஒரு கூட்டம் உண்டு. 1988ம் ஆண்டு 26 வயதிலேயே முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்கொண்டேன். இப்போது எடப்பாடி பழனிசாமி எல்லாம் எம்மாத்திரம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தவறை உணர்ந்து விட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மேலும் மேலும் துரோகம் இழைக்கிறார்.

 ’நோ’ மணியான எஸ்பி வேலுமணி

’நோ’ மணியான எஸ்பி வேலுமணி

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கும். வேலுமணி, தங்கமணியெல்லாம் இப்போ நோ மணியாகிவிட்டார்கள். அதிமுக வென்ற 65 தொகுதி என்பது ரூ.65,000 ஆயிரம் கோடி பணம்தான் காரணம். நாடாளுமன்ற தேர்தலில் நம் கணக்கை தொடங்குவோம் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+