திருப்பூரில் வானில் ஆச்சரியம்.. மொத்த பாஜகவையும் குஷியில் துள்ள விட்ட "ராட்சசன்".. அசால்ட் அண்ணாமலை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டமே பரபரத்து காணப்படுகிறது.. அதுவும் அந்த கருப்பு பலூன் சோஷியல் மீடியா முழுக்க வட்டமடித்து கொண்டிருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை, மேலிட பாஜக தலைவர்களின் நேரடி நம்பிக்கையையும், செல்வாக்கையும் பெற்றவர்.. அதற்கேற்றவாறு, தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தவும், மத்தியில் மோடியின் தலைமையிலான ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், நடைபயணத்தை கையில் எடுத்தார் அண்ணாமலை.

யாத்திரை: "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் கடந்த ஜூலை 18ம் தேதி, ராமேஸ்வரத்தில் துவங்கினார். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.. திருப்பூரில் இந்த பாதயாத்திரை நிறைவு பெறுகிறது..
இந்த நிகழ்வுக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.. பல்லடத்தில் இதன் நிறைவு விழாவையொட்டி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசப்போகிறார்.. இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகளில், பாஜகவினர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்..
பிரச்சாரம்: குறிப்பாக, திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில், 19 மண்டலங்களில் வாகன பிரச்சாரம் செய்து, நோட்டீஸ்களை வழங்கி வருகிறார்கள்..
நேற்று சாயங்காலம்கூட, மங்கலம் ரோடு குமரன் கல்லுாரி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி, மாநாடு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை மக்களிடம் வழங்கி அழைப்பு விடுத்தனர்.. அதேபோல, மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே பெரியளவில் ராட்சத பலுான் ஒன்றை பறக்க விட்டிருக்கிறார்கள். அதில், "வேண்டும் மோடி, மீண்டும் மோடி" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த பலூன்தான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.
ஆதரவுகள்: இந்த பலூனை பார்த்த பல பாஜகவினர் திரண்டு வந்து வாழ்த்து சொல்லி ஆதரவை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர், 'தமிழகத்தில் எந்த காலமும் தாமரை மலரவே மலராது" என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. மேலும் சிலரோ, கோ பேக் மோடி கருப்பு பலூன்களை இப்போதெல்லாம் தமிழகத்தில் பார்க்க முடியவில்லையே ஏன்? என்றும் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்த முறை தமிழகத்தில் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், பிரதமரின் திருப்பூர் வருகையானது, மிகப்பெரிய எதிர்பார்ப்பினையும், ஆர்வத்தையும் தமிழகத்துக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications