மோடி கிட்டயே கேட்டுட்டாரு.. "தலைநிமிறுது நாடு, கட்டாய மதமாற்ற தடைசட்டத்தை கொண்டு வாங்க: யார் பாருங்க
திருப்பூர் : மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க உள்ள மோடிக்கு, ஹிந்து முன்னணி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று முக்கிய கோரிக்கையையும் விடுத்திருக்கிறது.
லோக்சபா தேர்தல் முடிவில், 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..

பாஜக ஆட்சி: இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளில் தயவால் 3வது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA - என்.டி.ஏ.) தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதைத்தவிர, இந்தியா முழுவதுள்ள அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
வாழ்த்துக்கள்: அந்தவகையில், இந்து முன்னணியும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளது.. அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்:
"மோடியின் தலைமை பண்பால் உலக அரங்கில் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதை கண்டு மக்கள் பெருமிதம் கொண்டனர். மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செலுத்த மக்கள் அளித்த அங்கீகாரம் வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். வரும் ஐந்தாண்டுக்கான ஆட்சி காலம் மக்களிடம் இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழிபாட்டு தலங்கள்: பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமல்படுத்தி, கால்நடை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை தாங்களே நிர்வகிப்பது போல, ஹிந்து வழிபாட்டுதலங்களும் அரசின் பிடியில் இல்லாமல், தனித்து இயங்கும் வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பகுத்தறிவு என்ற பெயரால், ஹிந்துக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திடுவோரை கடுமையான சட்ட நடைமுறைகள் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தேச நலனுக்காக ஹிந்து முன்னணி சார்பில் முன்வைக்கிறோம். தேசம் இன்னமும் வலிமையான வளமான வளர்ச்சி பாதையில் செல்லும் நம்பிக்கையுடன் மோடிக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்" எனறு தெரிவித்துள்ளார்.
பரபரப்பு: நாடு முழுவதும் தற்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவிவரும்நிலையில், பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமல்படுத்துவதுடன், நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications