பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மனிதக் கழிவு வீச்சு! யார் அந்த மர்ம நபர்கள்?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி வகுப்பறையில் யாரோ மர்மநபர்கள் மனிதக் கழிவை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளிக்கு இன்று காலை மீண்டும் மாணவர்கள் வருகை தந்தனர். அப்போது அவரவர் வகுப்புகளுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் 10ஆம் வகுப்புக்கான அறைக்கு மாணவர்கள் சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு ஜன்னலிலும் மாணவர்கள் உட்காரும் நாற்காலியிலும் மனிதக் கழிவை யாரோ வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தனர்.
அவர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த வகுப்பறையில் இருந்த கழிவை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். இது போல் மனித கழிவை வீசி சென்றது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை இரவு நேரத்தில் பள்ளி அருகே சமூகவிரோத செயல்களில் ஈடுபட வந்தவர்கள் யாரேனும் இதை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications