பல்லடத்தில் மக்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. மதுபோதையில் அட்டூழியம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடை ஒன்றுக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு சிறு குறு பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள், வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் பலரும் தங்கி வேலை செய்து வருகின்றனர். பனியன் நிறுவனங்கள், விவசாய தோட்டங்கள், பண்ணைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்கு பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் சிக்கன் கடை ஒன்றிற்குள் புகுந்து பொதுமக்களையும், வாகனங்களையும் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் பேருந்து நிறுத்தம் பகுதியின் அருகில் உள்ள மதுபானக் கடையில் தகராறு ஏற்பட்டதால், கையில் கட்டைகளுடன் துரத்தி துரத்தி பொதுமக்கள் மீதும், வாகனங்கள் மீது ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் அந்த கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications