திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டரில் பறந்து பிரசாரத்திற்கு வந்த கமல்.. கூட்டம் இல்லாததால் விரக்தியுடன் திரும்பிச் சென்றார்!

Google Oneindia Tamil News

திருப்பூர்: உடுமலை பகுதியில் பிரசாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் வருகை புரிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Kamal Haasan who came to campaign by helicopter, returned due to lack of crowd

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஹெலிகாப்டரில் வருகை புரிந்தார். ஜெயலலிதாவுக்கு பின் உடுமலை பகுதிக்கு ஹெலிகாப்டர் பிரச்சாரத்துக்கு வருவதால் கமலஹாசனை காண்பதை விட ஹெலிகாப்டரை காணவே கூட்டம் கூடியது.

எடப்பாடியார் ஜாதகம் பார்த்துட்டோம்.. உங்க வீட்டுக்கே வந்து காலிங் பெல் அடிப்போம்.. உதயகுமார் பேச்சு எடப்பாடியார் ஜாதகம் பார்த்துட்டோம்.. உங்க வீட்டுக்கே வந்து காலிங் பெல் அடிப்போம்.. உதயகுமார் பேச்சு

தொடர்ந்து மடத்துக்குளம் பகுதியில் கமலஹாசன் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த கமலஹாசன் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் ஏமாற்றமடைந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பிரச்சாரத்தை முடித்து கொண்டு, உடுமலை பகுதிக்கு திரும்பினார். அங்கும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

இதனால் கடுப்பான கமல் பிரச்சாரம் செய்யாமலேயே ஹெலிகாப்டரில் பறந்தார். கமலை பார்க்க காத்திருந்த மக்கள் நீதி மய்யத்தினர் மற்றும் சில பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

English summary
Kamal Haasan, chairman of the makkal needhi maiam who had arrived by helicopter to campaign in the Udumalai area, returned disappointed with the lack of crowds
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X