அப்பா அவுட்.. மகன் இன்.. அவிநாசியில் பாஜக முருகனுக்கு எதிராக தவெக ஸ்கெட்ச்
திருப்பூர்: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் கோட்டையான அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தனபால் புறக்கணிப்பட்டு, பாஜக சார்பில் முருகன் களமிறங்க வாய்ப்புள்ளது. அவருக்கு எதிராக தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சராகவுள்ள எல்.முருகன் அவிநாசி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகனும் அவிநாசியில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த வாரம் அவிநாசி காசி விநாயகர் கோயிலில் முருகன் சாமி தரிசனம் செய்து பரப்புரையை தொடங்கியுள்ளார். அவிநாசியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று முருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாஜகவுக்கு அவிநாசி தொகுதி
தற்போது அதிமுக கூட்டணியில் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் மூலம் முருகன் அவிநாசியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக உள்ள அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியிருப்பது அந்தப் பகுதி அதிமுகவினரிடம் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் அங்கு 8 தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
1996 தேர்தலில் மட்டும் அதிமுக அங்கு வெல்லவில்லை. கடந்த 2016, 2021 தேர்தல்களில் தொடர்ச்சியாக 2 தேர்தல்களில் முன்னாள் தனபால் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் தனபால் அங்கு 1,17,284 வாக்குகளும், திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஆதித்தமிழர் பேரவை அதியமான் 66,382 வாக்குகளும் பெற்றனர். அதிமுக தனபால் 50,902 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
அவிநாசியில் போட்டியா
முன்னதாக 2016 தேர்தல் தனபால் 93,336 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட ஆனந்தன் 62,692 வாக்குகளும் பெற்றனர். தனபால் 30,674 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனபாலுக்கு வயதாகிவிட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் லோகேஷ் அவிநாசி தொகுதியை எதிர்பார்த்தார்.
அங்கு அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியானதால் லோகேஷ் அதிருப்தியாகி, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். தற்போது லோகேஷ் தமிழ்செல்வன் தவெக சார்பில் அவிநாசியில் போட்டியிடுவாரா அல்லது அவர்களின் சொந்த ஊரான சங்ககிரி தொகுதியில் போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications