Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 வயது மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, தந்தை தற்கொலை.. திருப்பூரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    3 வயது மகளை கொன்று, தந்தை தற்கொலை-வீடியோ

    திருப்பூர்: திருப்பூர் அருகே கடன் தொல்லையால் மகளை கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் அருகே பெருந்தொழவு கவுண்டம்பாளையம் பகுதியில், அஹமத் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாய கூலியாக, வேலை செய்து வருபவர் சதீஷ்குமார். இவர் தனது மனைவி தவமணி, மற்றும் மகள் மோனிகாவுடன் (3) அதே தோட்டத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.

    Man committed suicide in Tirupur

    சதீஷ்குமார் கோவை மாவட்டம் கும்பாலபட்டியில் இருந்த போது கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி தர கந்துவட்டிகாரர்கள் தொல்லை தந்ததால் மனமுடைந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார்.

    Man committed suicide in Tirupur

    தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரையை விழுங்கிய அவர், மனைவி தவமணிக்கும் கொடுத்துள்ளார். பிறகு, மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

    Man committed suicide in Tirupur

    இதனிடையே, பூச்சி மாத்திரை தாக்கத்தால், சதீஷ்குமார் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த தவமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவிநாசிபாளையம் போலிசார் சதீஷ்குமார் எழுதிவைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+