திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"காரணமே வேற.." ஒரே நாடு ஒரே தேர்தல்.. அதிமுக ஆதரவு தெரிவிக்க இதுதான் காரணம்., துரை வைகோ பரபர

Google Oneindia Tamil News

திருப்பூர்: மதிமுக சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட துரை வைகோ, செய்தியாளர்களிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மதிமுக வலுவாக இருக்கும் பகுதிகளில் திருப்பூரும் ஒன்று. இங்குள்ள சாமுண்டிபுரம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று அங்கு , 25 ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழாவைத் திருப்பூர் மதிமுக மற்றும் திலீபன் மன்றம் ஏற்பாடு செய்திருந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பலரும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு அதிமுக ஆதரவு.. கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமிஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு அதிமுக ஆதரவு.. கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி

 துரை வைகோ

துரை வைகோ

இதை மதிமுக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார். இந்த விழா சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோயில் அருகே வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் எனப் பல நூறு பேர் கலந்து கொண்டனர். மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.நாகராஜ் இந்த விழாவுக்குத் தலைமை வகிக்க, துரை வைகோ இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

 சமத்துவ பொங்கல்

சமத்துவ பொங்கல்

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு அளிக்கும் விவசாயி இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு தான் பொங்கல் விழா என்று குறிப்பிட்ட துரை வைகோ, சாதி, மதம், ஏழை, பணக்காரன் என அனைத்து பாகுபாடுகளையும் தாண்டி அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது தான் பொங்கல் விழா என்றார். ம் ஏழை, எளிய மக்கள் சமூக நல்லிணக்கத்துடன் பொங்கலைக் கொண்டாடுவது தான் நோக்கம் என்று கூறிய அவர், மதிமுக தலைவர் வைகோ தலைமையில் 25 ஆண்டுகளாகச் சமத்துவ பொங்கல் விமர்சிக்கக் கொண்டாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 ஒருமைப்பாடு

ஒருமைப்பாடு

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு விழாவாகவே பொங்கல் இருந்து வருகிறது. அனைத்து ஊர்களிலும் நாம் சமத்துவ பொங்கலைக் கொண்டாட வேண்டும். மதிமுக தலைவர் வைகோ சமத்துவ பொங்கல் விழாவைத் தொடர்ந்து ஊக்குவித்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரியும். மதிமுக நிர்வாகிகளும் இப்படி சமத்துவ பொங்கலைக் கொண்டாட ஏற்படு செய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்துவதாக இந்த சமத்துவ பொங்கல் இருக்கிறது" என்றார்.

ஆளுநர்

ஆளுநர்

தொடர்ந்து ஆளுநர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அவர் ஆளுநர் போலச் செயல்படாமல் பாஜக மாநில தலைவர் போலச் செயல்பட்டு வருகிறார்.. தொடர்ந்து சனாதன கொள்கைகளை வளர்க்கவே அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை நிறைவேற்றித் தரும் தீர்மானங்களுக்கு அவர் ஒப்புதல் அளிப்பதில்லை. மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவாமல் அரசியல்வாதிகள் போலச் செயல்படுவது கண்டனத்துக்குரியது.

 விசாரணை வேண்டும்

விசாரணை வேண்டும்

ஆளுநர் என்பவர் எந்த இயக்கத்தையும் சித்தாந்தத்தையும் சாராத ஒருவராகவே இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்காகச் செயல்பட வேண்டுமே தவிரச் சுயநலமாகச் செயல்படக் கூடாது. கோவையில் ஒரு யோக மையத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக யோகா மையத்தை நடத்தி வருகிறார்கள் என்றும் புகாரை உள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும்..

 ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. திமுக, அதிமுக, மதிமுக எல்லாம் கொள்கை அடிப்படையில் ஒரு திராவிட இயக்கம் தான். ஆனாலும் அவர்கள் மட்டும் இப்படி முடிவை எடுத்துள்ளனர். பாஜகவின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவர்கள் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளித்திருக்கக் கூடும். அதிமுக பிளவுபட்டதற்கும் யார் காரணம் என்பதை அவர்கள் கண்டறிய வேண்டும்" என்று தெரிவித்தார்.

English summary
Durai Vaiko targets governor Ravi, says he is following particular idealogy: Durai Vaiko Pongal function in Tiruppur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X