திருப்பூரில் பூக்களோடு பறந்து வந்த "செல்போன்" பதறிப்போன எல் முருகன்.. டக்கென மோடி செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: இன்று திருப்பூர் வருகை தந்த பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மக்களை சந்தித்தப்படியே திறந்த வாகனத்தில் சென்ற பிரதமர் மோடி மீது தொண்டர்கள் பூக்களை வீசி வரவேற்றனர். அப்போது பூக்களோடு செல்போன் ஒன்றும் மோடி அருகே வந்து விழுந்தது. இதனைப் பார்த்து அருகில் இருந்த எல் முருகன் பதறிப்போனார்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. வட மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களில் பாஜக வென்றிருந்தது. எனினும் தென் மாநிலங்களில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை.

Mobile phone thrown at PM Narendra Modi vechile during Tirupur rally

எனவே தென் மாநிலங்களில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது பாஜக. அந்த வகையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை மூலம் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். மேலும் அந்த சமயத்தில் பாஜகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்களின் கடைசி யாத்திரை இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். சிறப்பு விமானத்தில் அவர் கோவை சூலூர் விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றார். அதன்பிறகு விழா மேடைக்கு திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார்.

அப்போது பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் பூக்களை தூவி வரவேற்றனர். தொண்டர்களிடம் கை காட்டியபடி திறந்தவெளி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனத்தில் பிரதமர் மோடி வந்தார். அப்போது வாகனத்தில் அவரது அருகில் மத்திய இணை அமைச்சர் எல் முருகனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்தனர். தொடர்ந்து உற்சாகத்தோடு தொண்டர்களுக்கு கை காட்டியபடி பிரதமர் மோடி வந்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென பிரதமர் மோடியை நோக்கி செல்போன் ஒன்று பறந்து வந்து விழுந்தது. யாரோ செல்போனை பிரதமர் மோடியை நோக்கி வீசியது போல் இருந்தது. பிரதமர் மோடி வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது அந்த செல்போன் விழுந்ததது. அருகில் நின்றுகொண்டிருந்த எல் முருகன் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக எல் முருகன் அந்த செல்போனை எடுத்தார். அப்போது எல் முருகனிடம் பேசிய பிரதமர் மோடி அந்த செல்போனை கீழே கொடுக்குமாறு சொல்லிவிட்டார்.

விசாரணையில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அவர்கள்மீது தொண்டர்கள் பூக்களை வீசியபோது, கையில் வைத்திருந்த செல்போனையும் சேர்த்து கை தவறி வீசியது தெரியவந்தது. பிரதமர் மோடி வருகையால் பல்வேறு பாதுகாப்புகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது வாகனம் மீது செல்போன் விழுந்தது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+