திருப்பூரில் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்.. களத்தில் மதிமுக.. போலீசாருடன் தள்ளுமுள்ளு

திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பாக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பாக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடந்து வருகிறது. திருப்பூரில் நடக்கும் இந்த போராட்டத்தில் போலீசுக்கும், மதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.

பிரதமர் மோடி, இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

பிரதமர் மோடியின் மற்ற வருகை போலவே தமிழகத்தில் இதற்கும் கடும் எதிர்ப்பு கிளப்பி இருக்கிறது. மோடிக்கு எதிராக மதிமுக உள்ளிட்ட திராவிட அமைப்புகள் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட திராவிட அமைப்புகள் போராடி வருகிறது.

 மதிமுக போராட்டம்

மதிமுக போராட்டம்

இந்த நிலையில் திருப்பூரில் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று பல்வேறு போராட்டங்களை நடத்த மதிமுக திட்டமிட்டு இருக்கிறது. தற்போது திருப்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு தற்போது மதிமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள்.

 பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி

இந்த நிலையில் போராட்டம் நடக்கும் திருப்பூர் அண்ணாசாலை பகுதிக்கு வந்த பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், அங்கு பாரத் மாதாகீ ஜே என்று கோஷமிட்டார். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாஜக நிர்வாகிக்கு மதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 துரத்தி சென்றனர்

துரத்தி சென்றனர்

இதையடுத்து அந்த பாஜக நிர்வாகி அங்கிருந்து வேகமாக ஓட்டம் எடுத்தார். ஆனால் சில நிமிடத்தில் இன்னும் சில பாஜக நிர்வாகிகள் அங்கு கூடினார்கள். அதனால் அங்கு சலசலப்பு அடங்காமல் நீடித்தது. இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

 போலீஸ் வந்தது

போலீஸ் வந்தது

இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. போலீஸ் அங்கு இருந்த மதிமுக நிர்வாகிகளை பேசி சமாதானம் செய்தது. இதையடுத்து சலசலப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தற்போது போராட்டம் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+