மோடிக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பிய வைகோ.. கைது செய்த போலீஸ்.. திருப்பூரில் பெரும் பரபரப்பு!
பிரதமர் மோடிக்கு எதிராக திருப்பூரில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
திருப்பூர்: பிரதமர் மோடிக்கு எதிராக திருப்பூரில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பாக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் மதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

காலை 10 மணியில் இருந்தே இந்த போராட்டம் நடந்து வருகிறது. காலையில் இருந்தே இந்த போராட்டத்தில் நிறைய சலசலப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் புகுந்து பாரத் மாதா கீ ஜே என்று கூவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனை முடிந்த பின் வைகோ நீண்ட நேரம் பாஜகவிற்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கடுமையாக பேசினார். மிக கோபமாக மோடிக்கு எதிராக வைகோ கண்டனங்களை வைத்தார்.
இதனால் போலீஸ் அவரை, இரண்டுக்கும் மேற்பட்ட முறை பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தது. ஆனால் வைகோ பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து மோடி மீதான விமர்சனங்களை வைத்து வந்தார்.
இதனால் அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அமளியில் ஈடுப்பட்ட, மதிமுகவினரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் திருப்பூரில் இருக்கும் மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதேபோல் பெரியார் இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரும் இதில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு கொஞ்சம் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications