அனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்!
நீட் தேர்வு பெண் பயிற்சியாளர் தற்கொலை செய்துகொண்டார்
திருப்பூர்: ரூமில் அனிதா ரெஸ்ட் எடுக்கிறார் என்றுதான் நினைத்தார்கள்.. ஆனால் திடீரென வந்த வீடியோகால் பார்த்ததும்தான் எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள்.
திருப்பூர், சந்தராபுரம் என்பி நகர் பகுதியை சேர்ந்த தம்பதி ஈஸ்வரமூர்த்தி - சரஸ்வதி. இவர்களது 28 வயது மகள்தான் அனிதா. இவர் நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

அனிதாவிற்கும் கோவையை சேர்ந்த கணேசனுக்கும் போன வருடம் ஜூலை மாதம் கல்யாணம் ஆனது. கோவையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், மாமியார் வீட்டில் அனிதாவுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் ஆரம்பமானது. அதனால், கணவனுடன் திருப்பூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டு பக்கம் குடியேறினார் அனிதா.
ஆனால் அனிதாவுடன் சண்டை போட்டு கொண்டு, கணேசன் அவர் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். கோபித்து கொண்டு போன கணவன் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசிவரை கணேசன் வரவே இல்லை. இதனால் விரக்தி அடைந்த அனிதா அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை தனது தம்பி அசோக்கிற்கு அனிதா வீடியோ கால் செய்தார். அதில் அழுது கொண்டே பேசினார். ஃபேனில் துப்பட்டா தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, என்ன நடந்தது என்று கேட்க முயன்றார். ஆனால் அதற்குள் அனிதா போனை கட் பண்ணிவிட்டார். இதெல்லாம் நடக்கும்நேரம், அனிதாவின் அம்மாவோ மகள் ரூமில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருப்பதாகத்தான் நினைத்தார்.
ஆனால் வீடியோ கால் பார்த்ததும் அதிர்ந்து போன தம்பி, ஏதோ விபரீதம் நடப்பதாக எண்ணி உடனடியாக தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்யவும், அவர் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு போய் பார்த்தார்
அப்போதுதான், அனிதா ஃபேனில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்ததும், குடும்பமே கதறி அலறி துடித்தது. தகவலறிந்து வந்த ஊரக போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கல்யாணம் ஆகி ஒன்றரை வருடமே ஆவதால் ஆர்டிஓ செண்பகவள்ளி இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications