மாசம் பொறந்தா சுளையா ரூ 43 ஆயிரம் சம்பளம்.. போட்டி தேர்வு இல்லை.. ஆவினில் வேலை! அப்ளை பண்ணுங்க!
திருப்பூர்: திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தில் ஆவின் பால் பிரிவில் கால்நடை ஆலோசகர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தில் ஆவின் பால் பிரிவில் கால்நடை ஆலோசகர் பதவிக்காக 8 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வி தகுதி கால்நடை மருத்துவ படிப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கணினி குறித்த அறிவும் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 43 ஆயிரம் வழங்கப்படும். திருப்பூரில் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரில் வர வேண்டும். நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியானவர்களே தேர்வு செய்யப்படுவர்.
எதிர்நீச்சல்! சக்தி திருமணத்தில் ஜனனியின் மாஸ் என்ட்ரி.. இனி குந்தவை கோர்ட்டில் பால்.. முடிவு என்ன?

திருப்பூர் மாவட்டம்
நேர்காணல் நடைபெறும் இடம் Tirupur District Co-operative Milk producers Union Limited, Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam road, Tirupur - 641 605.
நேர்காணல் நடைபெறும் தேதி- 14.12.2022 காலை 11 மணிக்கு!

சான்றிதழ்கள்
நேர்காணலுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது போல் நவீன அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனமான என்ஐஎஸ்ஜி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் UIDAI சமூக ஊடக பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 ஆண்டு ஒப்பந்த பணி
இந்த பணியானது 5 ஆண்டிற்கான ஒப்பந்த பணியாகும். இதற்கு அதிகபட்ச வயது 35 வரை ஆகும். ஆண்டு சம்பளமாக ரூ 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி தொலைத்தொடர்பு, இதழியல், மல்டிமீடியா, அனிமேஷன் அல்லது விஎஃப்எக்ஸ் அல்லது வியாபாரம் நிர்வாகம் பிரிவில் இளங்கலை பட்டம்.

ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்
குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும். சமூக ஊடகம் குறித்த புரிதல் இருத்தல் வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு http://careers.nisg.org/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் டிசம்பர் 14 ஆம் தேதியாகும்.