திருப்பூர் வந்தால் எப்படியும் வாழ்ந்துவிடலாம்.. கனவுடன் வந்த பெண்.. நடந்த கொடூரம்.. என்ன நடந்தது?
திருப்பூர்: திருப்பூர் வந்தால் எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்று கனவுடன் வந்த வடமாநில பெண்ணை, பல்லடம் அருகே 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது. போலீசார் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் திருப்பூர் பகுதியில் வேறு வேலை வாங்கித் தருமாறு இவர் கேட்டிருக்கிறார்.
திங்கள் அன்று அப்பெண்ணை பல்லடத்திற்கு ராஜேஷ் வருமாறுஅழைத்து வந்துள்ளார். அத்துடன் சில நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று வேலை கொடுக்குமாறு சிபாரிசும் செய்துள்ளார். இருப்பினும் வேலை அப்போது கிடைக்கவில்லை. அதன்பின்னர் ராஜேஷ் தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இயல்பாக பழகியிருக்கிறார்.

விபரீத திட்டம்
பின்னர், வீட்டிற்கு செல்வதற்காக தன்னை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுமாறு அப்பெண் ராஜேஷிடம் கேட்டுள்ளார். அவர், தனது தம்பியோடு இருசக்கர வாகனத்தில் செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ராஜேஷின் தம்பி அவரை பேருந்துநிலையத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக விபரீத திட்டத்தை மனதில் உருவாக்கி வைத்திருந்திருக்கிறார்.

கூட்டு பலாத்காரம்
தன்னை நம்பி வந்த பெண்ணை, ராஜேஷின் தம்பி கணபதிபாளையத்தின் அருகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கனவே அவரது நண்பர்கள் 4 பேர் காத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அப்பாவி வடமாநில பெண்ணிடம் இருந்து பணம் மற்றும் செல்போனையும் பறித்துக் கொண்டு துரத்தி விட்டுள்ளனர்.

அவலத்தை சொன்னார்
வயிற்று பிழைப்புக்காக வேறு வேலை தேடும் கனவுடன் வந்த வடமாநில பெண், தன்னை நான்கு பேர் நாசப்படுத்தியதை கண்டு மனம் குமுறினார். அத்துடன் அடுத்த நாள் பல்லடம் காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லி புகார் அளித்திருக்கிறார்.

மூன்று பேர் கைது
விரைந்து செயல்பட்ட போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவரை கைது செய்துள்ளனர்.. மேலும், தலைமறைவாக உள்ள மற்ற மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 'புகாரளித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தி உள்ளார்கள். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 376 D, 384, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications